ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு. மீண்டும் விராட் கோலியின் பக்கம் சாயும் ரசிகர்கள் – என்ன ஆனது?

Kohli-1
- Advertisement -

விராத் கோலியின் தலைமையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5-வது போட்டியின் போது இந்திய அணிக்குள் ஏற்பட்ட கொரோனா அச்சம் காரணமாக அந்த போட்டி பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

INDvsENG

- Advertisement -

அதனை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட அந்த ஆட்டம் தற்போது மீண்டும் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் 5 வரை பர்மிங்காமில் நடைபெறும் என்று ஏற்கனவே முடிவு செய்து அட்டவணையும் வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

மேலும் இந்த 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தற்போது பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஜூலை 1ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்று வரும் இந்த பயிற்சி போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக தற்போது இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

kohli 1

அதன்படி இந்திய அணியின் தற்போதைய துணை கேப்டனான பும்ரா இந்த போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிகிறது. ஆனால் ஒருபுறம் ரோகித் சர்மாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வேளையில் தற்போது இந்திய அணியின் ரசிகர்கள் மீண்டும் விராட் கோலியை கேப்டனாக பார்க்க விரும்புகிறோம் என்று சமூகத்தில் தங்களது ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அதோடு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பல சாதனைகளைப் படைத்த விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமாவது இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்ற வகையில் தங்களது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs IRE : ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்த இந்திய வாய்ப்பை பெற்ற உம்ரான் மாலிக், கனவு தொப்பியை யாரிடம் வாங்கினார் தெரியுமா

ஆனால் ஒருபுறம் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது மீண்டும் முழுநேர பேட்ஸ்மேனாக இழந்த தனது பார்மை மீட்டெடுக்க கடுமையாக பயிற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement