IND vs WI : திலக் வர்மாவிற்கு தொடர்ந்து டி20 அணியில் வாய்ப்பு குடுங்க. ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு – ஏன் தெரியுமா?

Tilak-Varma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது.

இந்த டி20 தொடரின் முதலாவது போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் நாளை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த திலக் வர்மாவிற்கு கடந்த போட்டியின் போது அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படி தனது அறிமுக வாய்ப்பை பெற்ற திலக் வர்மா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலேயே 39 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதிலும் குறிப்பாக 22 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் மூன்று சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி என 39 ரன்களை குவித்து அசத்தினார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் பொதுவாகவே இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் மிடில் ஆர்டரில் இந்திய அணியின் வீரர்கள் சற்று பொறுமையாகவே ஆடுகின்றனர். ஆனால் திலக் வர்மா அதிரடியாக விளையாடி அணியின் ரன் குவிப்பை உயர்த்துகிறார். அதோடு யுவராஜ் சிங் போன்று அவரது பேட்டிங் பாணியும் இருப்பதினால் நிச்சயம் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் திலக் வர்மா தேவை என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இதையும் படிங்க : IND vs WI : நாளைய 2ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதோடு எளிதாக சிக்ஸ் அடிக்கும் திறமை கொண்ட அவர் ஒரு சில ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கையை மாற்றக்கூடியவர் என்பதனாலும் அவர் தொடர்ச்சியாக டி20 இந்திய அணியில் பயணிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement