சஞ்சு சாம்சன் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆடிட்டாரு. அவருக்கு பதிலா இவருக்கு வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் வேண்டுகோள்

Samson
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி ஜூன் 28-ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Indian Team

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் முறையாக விளையாடி வரும் இந்திய அணி முதல் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் இரண்டாவது போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரின் முதல் போட்டியில் தொடை பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக பேட்டிங் செய்ய அவர் களத்திற்கு வராததால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா துவக்க வீரராக விளையாடினார். இதன் காரணமாக இரண்டாவது போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது.

tripathi

இதனால் நிச்சயம் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி விட்டார் என்பதனால் ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் திரிப்பாதிக்கு அறிமுக வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆதரவு எழுந்துள்ளது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக 3-வது வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : செல்லும் இடமெல்லாம் வெற்றி – நட்சத்திரங்கள் பாராட்டும் இந்திய கிரிக்கெட்டின் கோச் பற்றிய அலசல்

மேலும் கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் ராகுல் திரிப்பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வரும் வேளையில் நாளை சஞ்சு சாம்சன் அல்லது ராகுல் திரிப்பாதி ஆகிய இருவரில் ஒருவருக்கு கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement