தயவுசெய்து நீங்களே ரிட்டயர்டு ஆய்டுங்க.. இந்த பார்மேட் உங்களுக்கு செட் ஆகாது.. ரோஹித்தை – விமர்சிக்கும் ரசிகர்கள்

Rohit
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய அணி வெற்றி பெறும் தோல்விகள் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. குறிப்பாக அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தது. இருப்பினும் இந்த சுற்றுப்பயணத்தின் மிக முக்கிய தொடராக பார்க்கப்படும் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

ஏனெனில் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரினை வென்றதே இல்லை என்பதனால் இம்முறை எப்படியாவது இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

- Advertisement -

ஆனால் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை ரசிகர்கள் பலரும் விமர்சித்து தங்களது காட்டமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 14 பந்துகளை சந்தித்த ரோஹித் சாரம் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

- Advertisement -

அதோடு 163 ரன்கள் பின்தங்கிய வேளையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணியை நிலையான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் டக் அவுட் ஆனதால் விரக்தியடைந்த ரசிகர்கள் அவர் மீது ஏமாற்றம் அடைந்து காட்டமான சில கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் குறிப்பிட்டதாவது :

இதையும் படிங்க : நாங்க இப்படி அசிங்கப்பட்டு தோத்து நிக்க இதுதான் காரணம். தோல்வி குறித்து – ரோஹித் சர்மா வருத்தம்

டெஸ்ட் கிரிக்கெட் இனி உங்களுக்கு செட் ஆகாது. நீங்களாக இந்த டெஸ்ட் ஃபார்மெட்டிலிருந்து ஓய்வு பெற்று விடுங்கள். 36 வயதாகும் நீங்கள் தொடர்ந்து விளையாடுவதற்கு பதிலாக உங்களிடத்திற்கு ஒரு இளம் வீரர் வந்தால் இது போன்ற வெளிநாடுகளில் விளையாடி அனுபவத்தை பெற்று பிற்காலத்தில் அவர் பெரிய வீரராக வரமுடியும் என்று தங்களது காட்டமான கருத்துக்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement