இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சச்சின் அடித்த இந்த சிக்சரை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள் அதை எப்போதும் ஞாபகம் வைத்து இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் உடனான போட்டி குறித்து நேற்று நேரலையில் பேசிக் கொண்டிருந்தார் அக்தர். அப்போது சச்சினுக்கு எதிராக பந்துவீசிய நினைவலைகள் பலவற்றை பற்றியும் பேசினார். கடந்த 1990 முதல் 2000ம் ஆண்டு வரை இருவருக்கும் இடையே இருந்த போட்டி அலாதியானது, அதிக பரபரப்பாக இருக்கும்.
ரசிகர்களுக்கும் இந்த மோதல் மிகவும் பிடிக்கும். இதில் பல நேரங்களில் சச்சினே வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து அக்தர் கூறுகையில் : சச்சினுக்கு எதிராக நான் பந்து வீசியதை எப்போதும் மறக்க முடியாது. அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவரை நான் 13 முறை விக்கெட் வீழ்த்தி உள்ளேன் என்று கூறினார். இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவர் கூறிய தவறான புள்ளி விவரத்தை கண்டுபிடித்து விட்டனர்.
சச்சினை அக்தர் வெறும் 8 முறை மட்டுமே அவுட் ஆக்கி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 5 முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முறையும் விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதேநேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் சச்சினை ஒரே ஒருமுறை விக்கெட் வீழ்த்தியுள்ளார் அவ்வளவுதான்.
The most famous six of a World Cup? #OnThisDay in 2003, chasing 273 v Pakistan, @sachin_rt smashed 98 off 75 balls with 12 fours, 1 six (off Shoaib Akhtar) at Centurion.
Is this the best World Cup innings by Tendulkar? Quote this tweet & let us know.pic.twitter.com/ks0Y5MKrfK
— Cricketopia (@CricketopiaCom) February 29, 2020
அதேபோல் கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அக்தர் வீசிய பந்தை, தேர்ட் மேன் திசையில் லாவகமாக சச்சின் டெண்டுல்கர் சிக்சர் விளாசினார். இந்த சிக்சரை யாராலும் மறக்க முடியாது.
இதுகுறித்து அத்தர் பேசுகையில் : சென்சூரியனில் சச்சின் அடித்த அந்த சிக்சரை இந்திய ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். இந்த ஒரு சிக்சர் 130 கோடி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது, அப்படி என்றால் ஒவ்வொரு நாளும் அவருக்கு சிக்சரை விட்டுக்கொடுப்பேன் என்று கூறியுள்ளார் அக்தர்.
ஆனால் அக்தர் குறிப்பிட்டவாறு சச்சினை 13 முறை எல்லாம் வீழ்த்தவில்லை. அக்தர் வெறும் 8 முறை மட்டுமே அவுட் ஆக்கி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 5 முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முறையும் விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதேநேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் சச்சினை ஒரே ஒருமுறை விக்கெட் வீழ்த்தியுள்ளார் அவ்வளவுதான்.
இந்நிலையில் இந்த புள்ளி விவரத்தை வைத்து இந்திய ரசிகர்கள் இணையத்தில் அக்தரை கலாய்த்து வருகிறார்கள். மேலும் அக்தர் குறிப்பிட்ட இந்த போட்டியில் சச்சின் 75 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அக்தர் பந்தில் ஆட்டமிழந்தார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.