நாள் கணக்கா ஏன் பாண்டியவுக்காக வெயிட் பண்றீங்க.. அவருக்கு பதில் இவரே போதும். சி.எஸ்.கே வீரருக்கு – குவியும் ஆதரவு

Pandya-and-Dube
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று மொஹாலி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் இந்த தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

நேற்றைய இந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஷிவம் துபே தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்று வருகிறார். ஏனெனில் இந்த போட்டியில் முதலாவதாக இந்திய அணி பந்துவீசுகையில் :

- Advertisement -

2 ஓவர்கள் வீசிய ஷிவம் துபே 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று இந்த மைதானம் கை கொடுக்காத வேளையில் சிவம் துபே பந்துவீச்சிற்கு வந்து 2 ஓவர்களை வீசி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அதேபோன்று 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட துவங்கியதும் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது நான்காவது வீரராக களமிறங்கிய துபே ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும் பின்னர் நேரம் செல்ல செல்ல தனது அதிரடியை கையாண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 40 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 60 ரன்கள் குவித்து போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்காக கடந்த சில சீசன்களாக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே தற்போது இந்திய அணியிலும் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் இனி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அவரை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று ரசிகர்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒரே ஓவரில் 6, 4, 4, 4, 6.. அப்ரிடியை பொளந்த ஃபின்.. மிரட்டிய சிஎஸ்கே வீரர்.. பாகிஸ்தானை அடக்கிய நியூசிலாந்து

ஏனெனில் ஹார்டிக் பாண்டியா சிறப்பாகவே செயல்பட்டாலும் ஒரு சில போட்டிகளில் அவர் காயம் அடைந்தால் கூட மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொள்கிறார். இப்படி ஒரு வீரக்காக நாம் நாள் கணக்கில் காத்திருப்பதை விட கையில் இருக்கும் இந்த வீரருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்தால் மேலும் தன்னம்பிக்கை அதிகரித்து அவர் அசைக்க முடியாத வீரராக மாறுவார் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement