அவரு என்ன தப்பு பண்ணாருன்னு அவரை டீம்ல இருந்து தூக்குனீங்க – இளம்வீரருக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல்

IND-1
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று கேப்டவுன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணியில் இணைந்ததால் இளம் வீரரான விஹாரி அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால் அவரது இந்த நீக்கம் ரசிகர்களிடையே பெரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதுவரை இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி தற்போது மிடில் ஆர்டரில் இந்திய அணி பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் கூட பின்வரிசையில் களமிறங்கும் அவர் சிறப்பாக நின்று ரன் குவிக்க கூடிய வீரராக இருக்கிறார். இப்படி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விஹாரிக்கு அணியில் நிச்சயம் இடம் கொடுப்பது அவசியம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் அவருக்கு இது போன்ற வாய்ப்புகளை கொடுக்க மறுப்பது சரியானது கிடையாது என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Vihari

மேலும் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்திருந்த விகாரி அந்த போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்றார். இப்படி ஒரு அருமையான வீரரை அணியில் இருந்து ஒதுக்குவது சரியல்ல என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க : இஷாந்த் சர்மா இருந்தும் உமேஷ் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க இதுவே காரணம் – விராட் கோலி பேட்டி

விஹாரியின் இந்த நீக்கம் குறித்த உங்களது கருத்து என்ன? அதை கமென்ட் பகுதியில் பதிவிடலாம் நண்பர்களே. புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ச்சியாக சொதப்பி வரும் வேளையில் விஹாரிக்கு இடம் கிடைக்காமல் இருந்து வருவதும் பெரிய விவாதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement