INDvsWI டி20 : இன்னைக்காவது இந்திய அணியில் விளையாட இவருக்கு ஒரு வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் ஆதரவு

ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாட தயாராக இருக்கிறது. அதன்படி இரு அணிகளும் கொல்கத்தா மைதானத்தில் கடந்த சில தினங்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த வேளையில் ஐபிஎல் ஏலமும் ஒருபுறம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

INDvsWI

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய அணியின் ஆட்டம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பலமாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி அதிகளவில் உள்ளது. இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக யார் ரோகித் சர்மாவுடன் களம் இறங்குவார்கள்? என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் ஏற்கனவே அணியின் தொடக்க வீரர் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் தற்போது மீதமுள்ள இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஏற்கனவே ரோகித் சர்மா தொடர்ச்சியாக இஷான் கிஷன் உடனே துவக்க வீரராக களமிறங்கி வருவதால் இன்றைய போட்டியிலும் அவரே களமிறங்கிய விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இருப்பதனால் கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு குவிந்து வருகிறது.

gaikwad

ஏனெனில் இஷான் கிஷன் இடதுகை அதிரடி ஆட்டக்காரராக இருந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரராக களமிறங்கி தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் திறமை உடையவர். அதுமட்டுமின்றி எப்பொழுதுமே அணியின் ஸ்கோரை துவக்கத்தில் நிதானமாக வலுப்படுத்தி பின்னர் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரன்களை சேர்க்கும் கெய்க்வாட் நிச்சயம் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடுவதால் அவர் விரைவில் ஆட்டமிழக்க வாய்ப்பு அதிகம்.

- Advertisement -

ஆனால் ருதுராஜின் ஆட்டம் அப்படி கிடையாது என்றும் அவர் சரியான வேளையில் ரிஸ்க் எடுத்து நிச்சயம் பெரிய ரன் குவிப்புக்கு செல்வார் என்றும் கூறிவருகின்றனர். 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 46 சராசரியுடன் 839 ரன்களைக் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் அதிரடியாக விளையாடி சதம் விளாசி உள்ளதால் நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் அவர் சரியான துவக்க வீரராக இருப்பார் என்றும் அவருக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : தோனி கூட சொல்லாத இந்த விஷயத்தை சி.எஸ்.கே ஓனர் ஸ்ரீனிவாசன் என்கிட்ட சொன்னாரு – தீபக் சாஹர் ஓபன்டாக்

மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளதால் அவருக்கான வாய்ப்பை தொடர்ந்து வழங்கினால் அவர் நிச்சயம் அந்த உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெறுவார் என்பதால் இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement