தம்பி கொஞ்சம் பாத்து பேசுங்க. சச்சினை அவமதித்த ஆஸி வீரரை – வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

Sachin-and-Marnus
- Advertisement -

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றிலேயே முதல்முறையாக மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான போட்டி இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மகளிர் காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடைசியாக 1998-ல் காமன்வெல்த் தொடரில் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. அதன் பிறகு சுமார் 24 ஆண்டுகள் கழித்து தற்போது மகளிரை முன்னிறுத்தி கிரிக்கெட் போட்டியை காமன்வெல்த் ஒரு அங்கமாக சேர்த்துள்ளதால் பலரும் இதனை வரவேற்றுள்ளனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட்டை பார்ப்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு அழகான விடயம் இந்திய மகளிர் அணியின் பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று காமன்வெல்த் தொடரில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட இந்த கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் வெளியிட்ட பதிவில் :

- Advertisement -

நீங்கள் சொல்வதை ஏற்கிறேன் சச்சின். ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் மோதும் தொடக்க போட்டியை பார்க்க அற்புதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரை உலகம் முழுவதும் பல்வேறு ஜாம்பவான்களும் மரியாதையுடன் குறிப்பிட்டு வரும் வேளையில் தற்போது இளம் வீரரான மார்னஸ் அவரை சச்சின் என்று பெயரிட்டு பதிவினை பகிர்ந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு ரசிகர்கள் அனைவரும் பல்வேறு வகையில் அவரது இந்த பதிவிற்கு தங்களது கோபத்தினை பதில் பதிவாக வெளியிட்டு வருகின்றனர். அதன்படி நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : மார்னஸ் நீங்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய வீரர்கள் கூட சச்சினை மரியாதை குறைவாக பேசுவதில்லை.

- Advertisement -

கொஞ்சம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். அவர் மதிப்புமிக்க இந்தியர் உங்களைவிட சீனியர் என்று பதிவிட்டுள்ளனர். அதேபோன்று மற்றொரு ரசிகர் பதிவிடுகையில் : சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படுபவர். அவரை நீங்கள் சார் என்று அழைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : ரோஹித் மற்றும் டிராவிட் ஏன் இந்த முடிவை எடுத்தாங்கனு புரியல – முகமது கைப் காட்டம்

இன்னும் சிலர் பதிவிட்டு இருந்த பதிவுகளில் உங்களுடைய பிறப்பின் போதே சச்சின் கிரிக்கெட்டிற்காக அறிமுகமாகி இருப்பார். எனவே பார்த்து பேச வேண்டியது அவசியம் என்றும் தங்களது காட்டமான கருத்துக்களை சமூக வலைதளத்தின் வாயிலாக முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement