IND vs WI : ரோஹித் மற்றும் டிராவிட் ஏன் இந்த முடிவை எடுத்தாங்கனு புரியல – முகமது கைப் காட்டம்

Kaif-and-Rohit-Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் சூரியகுமார் யாதவ் களமிறங்கியது அனைவரது மத்தியிலும் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Arshdeep Singh IND vs WI

- Advertisement -

ஏனெனில் இன்னும் சில மாதங்களில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள வேளையில் இந்திய அணியில் தொடர்ச்சியாக இப்படி ஓப்பனர்கள் மாற்றப்பட்டு வருவது பெரிய விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. ஏனெனில் கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் இஷான் கிஷன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் ரோகித்துடன் துவக்க வீரராக களமிறங்கி வந்தார்.

ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட்டை பின்னால் தள்ளி நான்காவது இடத்தில் விளையாடும் சூரியகுமார் யாதவ்-க்கு ரோஹித் சர்மா துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பினை அளித்தார். ஏற்கனவே இசான் கிஷன், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா என பலர் துவக்க வீரர்களுக்கான வரிசைக்கு காத்திருக்கின்றனர்.

இவ்வேளையில் தற்போது சூரியகுமார் யாதவை இந்திய அணி துவக்க வீரராக களமிறக்கியுள்ளது பெரிய அளவில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் எடுத்த இந்த முடிவை தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்ன இருந்தாலும் சரி இந்திய அணியின் இந்த முடிவு எனக்கு சுத்தமாக புரியவில்லை.

- Advertisement -

கடந்த இரண்டு மூன்று போட்டிகளாக ரிஷப் பண்ட்டை துவக்க வீரராக களமிறக்கினீர்கள். ஆனால் தற்போது மீண்டும் சூரியகுமாரை அந்த இடத்திற்கு கொண்டு வந்தது தவறு. ஏனெனில் ரிஷப் பண்ட்டை துவக்கவீராக இறக்கும்போதே அவருக்கு ஐந்து முதல் ஆறு போட்டிகள் வரை வாய்ப்பு தந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு மூன்று போட்டிகளில் அவருக்கு வாய்ப்பினை தந்துவிட்டு தற்போது நான்காம் இடத்தில் சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமாரை துவக்க வீரராக களம் இறக்க நினைப்பது தவறான ஒரு முடிவு.

இதையும் படிங்க : IND vs WI : இங்க என்ன மீயூசிக்கல் சேர் போட்டியா நடக்குது – அணி நிர்வாகத்தை விளாசும் முன்னாள் வீரர்கள்

ஆரம்பத்தில் விக்கெட் விழுந்தாலும் நான்காவது வீரராக களமிறங்கும் சூரியகுமார் யாதவ் அசத்தலாக அந்த இடத்தில் ஆடி வருகிறார். எனவே அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். அவரை துவக்க வீரராக மாற்ற கூடாது என முகமது கைஃப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement