ஷிவம் துபேவை விட அவர் பெரிய ஆளா? என்னங்க இதெல்லாம்? கவுதம் கம்பீரின் முடிவை – விளாசும் ரசிகர்கள்

Dube and Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பூஜ்யத்திற்கு ஒன்று (0-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

கம்பீர் செய்த தவறை விமர்சிக்கும் ரசிகர்கள் :

அதனை தொடர்ந்து இன்று அக்டோபர் 31-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டியானது நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 125 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது எளிதாக 126 ரன்களை குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருந்தன. அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்ததாக கூறி ரசிகர்கள் பலரும் கௌதம் கம்பீரை சாடி வருகின்றனர். ஏனெனில் இன்றைய போட்டியின் போது மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டிய திலக் வர்மா களமிறங்காமல் அந்த இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

அப்படி கிளமிறங்கிய அவர் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, அக்சர் படேல் என அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேற ஏழாவது இடத்தில் ஷிவம் துபே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவருக்கு முன்னதாக ஹர்ஷித் ராணா களம் இறக்கப்பட்டார். இப்படி டி20 போட்டிகளில் மிகச் சிறந்த அதிரடி ஆட்டக்காரராக பார்க்கப்படும் ஷிவம் துபேவிற்கு முன்னதாக ஏன் ஹர்ஷித் ராணா களமிறங்க வேண்டும்? என்று பலரும் கெளதம் கம்பீரை சாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் முகமது ரிஸ்வானின் மாபெரும் சாதனையை முறியடித்த – அபிஷேக் சர்மா

ஒருவேளை ஷிவம் துபே முன்கூட்டியே களமிறங்கி இருந்தால் அவர் அபிஷேக் ஷர்மாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க முடியும் என்றும் முழுநேர பேட்ஸ்மேனான ஷிவம் துபேவை இவ்வளவு பின்னுக்கு தள்ளி களமிறங்க வைத்தது கௌதம் கம்பீர் செய்த தவறுதான் என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement