IND vs AUS : நல்ல பிளேயர் வெளிய இருந்தும் அவருக்கு ஏன் வாய்ப்பு தந்தீங்க – ரோஹித்தை விளாசும் ரசிகர்கள்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 71 ரன்களையும், ராகுல் 55 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 19. 2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Umesh Yadav

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக கேமரூன் கிரீன் 61 ரன்களையும், மேத்யூ வேட் 45 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு முக்கிய காரணமாக ரோஹித்தின் அணி தேர்வினை ரசிகர்கள் கடிந்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அற்புதமாக பந்து வீசி வரும் தீபக் சாகரை வெளியே உட்கார வைத்துவிட்டு உமேஷ் யாதவை இந்திய அணியில் ரோஹித் ஏன் தேர்வு செய்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வரலாறு படைத்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

அதோடு இன்றைய போட்டியில் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசிய உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 27 ரன்களை வாரி வழங்கியிருந்ததால் அவர் மீது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement