IND vs HK : ஹாங்காங் பேட்ஸ்மேன்களே அவரை அடிக்குறாங்க. இன்னும் அவர் டீமுக்கு அவசியமா? – ரசிகர்கள் கேள்வி

Avesh-Khan
- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் நேற்று இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணியானது இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக ரோஹித் 21 ரன்களையும், ராகுல் 36 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழக்க பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது ஜோடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றது.

Suryakumar Yadav

- Advertisement -

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிடக்காமல் இருந்த விராட் கோலி 44 பந்துகளில் ஒரு பவுண்டரி மூன்று சிக்சர் என 59 ரன்களை குவித்தார். அதே வேளையில் 26 பந்துகளை சந்தித்த சூரியகுமார் யாதவ் 6 சிக்சர் மற்றும் 6 பவுண்டரி என 68 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை எட்டியது.

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்ததால் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. என்னதான் இந்த போட்டியில் ஹாங்காங் அணி தோற்று இருந்தாலும் அவர்களின் ஆட்டம் பாராட்டக்கூடியதாக இருந்தது.

Avesh-Khan-2

ஏனெனில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியையே இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஆல் அவுட் ஆக்கியது. ஆனால் ஹாங்காங் அணி 5 விக்கெட்டை மட்டுமே இழந்து 152 ரன்கள் வரை வந்து இறுதிவரை போராடியது பாராட்டப்படும் விடயமாக மாறி உள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் நான்கு ஓவர்களை வீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அண்மை காலங்களாகவே தனது மோசமான பந்துவீச்சால் அடிக்கடி விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட ரவீந்தர ஜடேஜா – இர்பான் பதானை முந்தி ஆசிய கோப்பை வரலாற்றில் புதிய சரித்திர சாதனை

இந்நிலையில் ஆவேஷ் கான் பலம் இழந்த இந்த ஹாங்காங் அணிக்கெதிராக சிறப்பாக பந்து விசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இவர்களும் அவரது பந்துவீச்சை அடித்து விளாசியதால் இனியும் அவர் அணிக்கு தேவைதானா? என்ற கேள்வியை ரசிகர்கள் சமூகவலைதளத்தின் மூலமாக எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement