முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீரரை குப்பை என அவமானப்படுத்திய – மேத்யூ ஹைடன்

Hayden
- Advertisement -

உலகம் முழுவதிலும் இருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் நேற்று கோலாகலமாக துவங்கியது. உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு எதிரான முதல் ஓவரை இந்திய வீரர் உமேஷ் யாதவ் வீசினார். அதில் 3-வது பந்தில் கடந்த வருடம் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை பெற்ற இளம் வீரர் ருதுராஜ் கைக்வாத்தை டக் அவுட் செய்து சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்த அவர் 4-வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வேயை 3 ரன்களில் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே போட்டியை கொல்கத்தாவின் பக்கம் திருப்பினார்.

- Advertisement -

போராடிய தோனி, கொல்கத்தா வெற்றி:
இதனால் 28/2 என தடுமாறிய சென்னைக்கு அடுத்து வந்த ராபின் உத்தப்பா 28 ரன்கள், அம்பத்தி ராயுடு 15 ரன்கள், சிவம் துபே 3 ரன்கள் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 61/5 என திண்டாடிய சென்னை 100 ரன்களை தொடுமா என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டது. அப்போது களமிறங்கிய சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி யாருமே எதிர்பாராத வண்ணம் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடினார்.

ஆரம்பத்தில் மெதுவாக விளையாடினாலும் நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய அவர் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 38 பந்துகளில் 50* அடித்தார். இதனால் 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் அரைசதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் தவித்து வந்த அவர் ஒரு வழியாக பார்முக்கு திரும்பினார். அவரின் போராட்டத்தால் தப்பிய சென்னை 20 ஓவர்களில் 131/5 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 132 என்ற எளிய இலக்கை துரத்திய கொல்கத்தாவிற்கு அனுபவ தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 44 (34) ரன்கள், சாம் பில்லின்ஸ் 25 (22) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்ய கடைசி நேரத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 20* ரன்கள் அடித்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் கொல்கத்தா எளிதான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

குப்பை என கூறிய மத்தியூ ஹைடன்:
இந்த வெற்றியால் முதல் போட்டியிலேயே 2 புள்ளிகளை பெற்ற கொல்கத்தா இந்த வருட ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடக்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மறுபுறம் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் புதிய பயணத்தை தொடங்கிய சென்னை முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வி அடைந்துள்ளது. இந்த வெற்றிக்கு கொல்கத்தா சார்பில் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி வித்திட்ட உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இந்த போட்டியின் முதல் ஓவரை வீசிய முதல் பந்திலேயே நோ-பால் வீசி பிரீ ஹிட் கொடுத்தார். இருப்பினும் அதன் பின் சுதாரித்த அவர் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதை பற்றி வர்ணனை செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் அதிரடி வீரர் மேத்தியூ ஹெய்டன் “ஏதோ ஒரு அணியின் குப்பை இப்போது கொல்கத்தா அணியின் புதையலாக மாறியுள்ளது” என உமேஷ் யாதவை அவமதிக்கும் வண்ணம் தொலைக்காட்சியில் பேசினார்.

- Advertisement -

வறுத்தெடுக்கும் ரசிகர்கள்:
இதனால் ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். ஏனெனில் தற்போது 34 வயதை கடந்துள்ள அவர் சமீப காலங்களாக மோசமாக பந்து வீசியதால் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வந்தார்.

அதே காரணமாகவே இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்தும் காணாமல் போன அவர் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதற்கு திண்டாடி வருகிறார். இருப்பினும் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்த கொல்கத்தா அணி நிர்வாகம் கடந்த மாதம் நடந்த ஏலத்தில் 2 கோடி கொடுத்து வாங்கியது.

தற்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்ட அவர் முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். சொல்லப்போனால் இதுவரை 9 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் ஐபிஎல் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சமீப காலங்களாக மோசமாக செயல்பட்டார் என்பதற்காக அவரை எப்படி மேத்யூ ஹைடன் ஒரு குப்பை என அழைக்கலாம் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Advertisement