இந்தியாவின் 360 நிச்சயம் இவர்தான். என்னமா ஆடுறாரு – இளம்வீரரை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்

sky
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்கியது. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 275 ரன்கள் என்ற டீசன்டான ரன் குவிப்பை வழங்க அதன் பின்னர் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட துவங்கியது.

- Advertisement -

துவக்க வீரர் ப்ரித்வி ஷா வழக்கம் போல அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகளை அடித்தாலும் மேலும் ஆக்ரோஷமாக விளையாடி ஆசைப்பட்டு 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த இஷான் கிஷன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவரும் வெளியேற இந்திய அணி சிக்கலை சந்தித்தது. 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி எவ்வாறு சரிவிலிருந்து மேலே போகிறது என்று எதிர்பார்த்திருந்த வேளையில் கேப்டன் தவானும் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 65 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த வேளையில் 5 ஆவது வீரராக சூர்யகுமார் யாதவ் மனிஷ் பாண்டே உடன் இணைந்தார். 65 ரன்கள் இருந்த போது இணைந்த சூர்யகுமார் யாதவ் மணிஷ் பாண்டே உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 50 ரன்களை குவித்தனர். நான்காவது விக்கெட்டாக 115 ரன்களில் இருந்தபோது மணிஷ் பாண்டே 37 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார்.

sky 1

இப்படி ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங் மூலம் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் உதவியுடன் 53 ரன்கள் குவித்து தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலாவது அரை சதத்தை அடித்து அசத்தினார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி, ஆப் சைடில் பவுண்டரி, ஸ்வீப் ஷாட், அப்பர் கட் என அனைத்து திசையிலலும் சூர்யகுமார் யாதவ் ஒரு பயம் இல்லா 360 டிகிரி ஆட்டத்தை விளையாடினார் என்று கூறலாம்.

sky

அவரது இந்த ஆட்டத்தை கண்ட ரசிகர்களும் சரி, கிரிக்கெட் வர்ணனையாளர் களும் சரி பயமின்றி அவர் விளையாடிய இவரது ஆட்டத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர். மேலும் பீல்டர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று தெரிந்து அந்த கேப்பை பயன்படுத்தி விளையாடிய சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் 360 கிரிக்கெட் வீரர் தான் என்று அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement