அஷ்வினுக்கு நீங்க உபதேசம் பண்ண வேணாம். அவருக்கு எல்லாம் தெரியும் – பாண்டிங்கை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

Ashwin

பல்வேறு இன்னல்களை கடந்து 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது கிரிக்கெட் போட்டிகள் மெல்ல மெல்ல ஆரம்பித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு 13 ஆவது சீசனாக இத்தொடர் முழுவதுமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த தொடரில் அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாடி இருக்கிறார். கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வின் இந்த ஆண்டு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக விளையாட இருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கும் அஸ்வின் அங்கு பயிற்சி மேற்கொண்டு இந்த தொடரில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இந்நிலையில் தற்போது டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் அஸ்வின் குறித்து வெளிப்படையாக கருத்தினை கூறியுள்ளார் அதில் அவர் கூறுகையில் :

Ashwin-1

கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக பட்லரை அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்து இருந்தார். ஆனால் அது தவறு அவ்வாறு செய்வதால் கிரிக்கெட் கேம்மின் ஸ்பிரிட் ஐ குறைக்கிறது. அதனால் அஸ்வினிடம் இது குறித்து விளக்கி சொல்வேன். மேலும் இந்த ஆண்டு இது போன்று செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வேன் என்று பாண்டிங் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அஸ்வின் கடந்த ஆண்டு பட்லரை மான்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தபோது கிரிக்கெட் உலகில் இது குறித்த விவாதம் பலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் அஷ்வினின் இந்த செயல் குறித்து பலவிமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாண்டிங்கின் இந்த கருத்திற்கு ரசிகர்களிடையே கடும் விமர்சனம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கிரிக்கெட் விதிமுறைகளில் மான்கட் விக்கெட்க்கு என்று ஒரு வரைமுறை என்பது உள்ளது.

ashwin

எனவே அஸ்வின் செய்தது தவறு கிடையாது. அப்படியே இருந்தாலும் அப்படி கிரீஸை தாண்டும் பேட்ஸ்மேன்கள் செய்வது தவறில்லையா ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி கிரிக்கெட் போட்டிகளில் பாண்டிங் விளையாடும்போது கோபப்பட்டது கிடையாதா அவரது ஆட்டிட்யூட் சரி எனும்போது அஸ்வினின் ஆட்டிட்யூட் தவறா என்றும் பாண்டிங்கை எதிர்த்துப் கருத்துக்களை இந்திய ரசிகர்கள் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.