IND vs NZ : இதுக்கு அவங்க 2 பேரும் வீட்லயே இருந்திருக்கலாம். பாண்டியா எடுத்த கறார் முடிவு – ரசிகர்கள் அதிருப்தி

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது.

IND-vs-NZ

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோன்று இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ப்ரித்வி ஷா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய இருவருக்கும் இதுவரை வாய்ப்பு அளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் இஷான் கிஷனுக்கு பதிலாக விக்கெட் கீப்பரான ஜித்தேஷ் சர்மாவிற்கு ஒரு வாய்ப்பினை வழங்கிருக்கலாம்.

Jitesh Sharma

ஏனெனில் தற்போது உள்ள இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா சற்று முன்கூட்டியே இறங்குவதால் பினிஷிங் ரோலில் பொருத்தம் இல்லாத தீபக் ஹூடா ஆறாவது இடத்தில் களமிறங்கினார். ஆனால் வழக்கமாகவே அந்த இடத்தில் விளையாடி பழக்கப்பட்ட ஜித்தேஷ் சர்மாவிற்கு வாய்ப்பினை வழங்கி இருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதேபோன்று துவக்க வீரர்களில் யாராவது ஒருவருக்கு பதிலாக அருமையான பார்மில் இருக்கும் ப்ரிதிவி ஷாவிற்கு வாய்ப்பினை வழங்கி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரஞ்சி தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷா டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கிருக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளுக்கு அவரும், டி20க்கு இவரும் ஒப்பனரா விளையாடுனாதான் கரெக்ட்டா இருக்கும் – கம்பீர் கருத்து

ஆனால் ஹார்டிக் பாண்டியா அணியில் யாரையும் நீக்கவே மாட்டேன், புதிதாக யாருக்கும் வாய்ப்பு தரமாட்டேன் என்று கறாராக இருப்பதால் தொடர்ச்சியாக ப்ரிதிவி ஷாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஜித்தேஷ் சர்மாவிற்கும் அவர் வாய்ப்பினை தர மறுப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement