இனிமேலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை யூஸ் பண்ணிக்கோங்க – இளம்வீரரை எண்ணி ரசிகர்கள் வருத்தம்

Samson
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.

IND-vs-WI

- Advertisement -

அப்படி இல்லையெனில் இந்த தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இருந்த வேளையில் இந்திய அணி மிக எளிதாக அவர்களை வீழ்த்தி அசத்தியது. ஆனால் அவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் ஓய்வு எடுத்துக்கொண்ட வேளையில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் இந்திய அணியில் வாய்ப்புக்காக தொடர்ச்சியாக காத்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு இம்முறை விராட் கோலிக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை சாம்சன் தவற விட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த போட்டியில் 19 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 9 ரன்களிலே ஆட்டம் இழந்து வெளியேறினார்.

Samson

பெரிய அளவில் திறமையுள்ள வீரராக பார்க்கப்படும் சஞ்சு சாம்சனுக்கு ஒருபுறம் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருந்து வரும் வேளையில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் இப்படி அவர் தொடர்ச்சியாக சொதப்பி வருவது அவரது அடுத்த கட்ட பயணத்தையும் முடிவுக்கு கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் வாய்ப்புக்காக பல்வேறு வீரர்களும் இந்திய அணியில் காத்திருக்கும் வேளையில் கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளை பயன்படுத்தினால் தான் தொடர்ச்சியாக அணியில் இடம் பெற்று விளையாட முடியும். ஆனால் சாம்சன் இதுபோன்று கிடைக்கும் வாய்ப்புகளையும் தவற விட்டு வருவதால் இனியும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவது கடினம் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க : ரோஹித், ரசல் மாதிரி சிக்ஸர் அடிக்க முடியாதுன்னு நினைக்காதீங்க, அவர் அதுக்கும் மேல – இந்திய வீரரை பாராட்டிய கர்ட்லி ஆம்ப்ரோஸ்

தற்போது 28 வயதாகும் அவருக்கு பதில் இளம் வீரர்களையே இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்ய ஆர்வம் காட்டும் என்பதனால் இனிவரும் தொடர்களிலாவது சரியான முறையில் தனது வாய்ப்பைகளை பயன்படுத்தி ரன்களை குவிக்க வேண்டும் என சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement