இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தற்போது சவுதாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட இரண்டாவது நாளில் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்து அணி சார்பாக ஜேமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி வீரர்கள் தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகின்றனர். அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லாதம் 30 ரன்களும், கான்வே 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டைலர் ரன்கள் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட சற்று அதிகமான ரன் குவிப்பை வழங்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின்போது அஜித் ரசிகர்கள் மைதானத்தில் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி ஏற்கனவே ஐபிஎல் தொடரின்போது அஜித் நடித்த படத்தின் அப்டேட் கேட்டு பலரும் மைதானத்தில் பதாகையை ஏந்திக் கொண்டும், வீரர்களிடம் உரையாடிக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் தற்போது நேற்று இங்கிலாந்து சவுதாம்ப்டன் நகரில் அஜித் ரசிகர்கள் சிலர் பதாகையுடன் அமர்ந்திருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அதில் வலிமை அப்டேட் என்று எழுதப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த வெளிநாட்டு ரசிகர்களுக்கு அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பது புரியவில்லை. சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அப்டேட் கேட்டு வரும் அஜித் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.