இந்திய மகளிர் அணியின் தோல்விக்கு கோலியும், சேவாக்கும் தான் காரணம் கேஸ் போட்ட ரசிகர் – இது என்னடா புதுசா இருக்கு

- Advertisement -

இந்திய மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி அந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்தது. இந்த இறுதிப் போட்டிக்கு முன்னர் இந்திய அணி மகளிர் வீரர்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

aus w

- Advertisement -

மேலும் இந்த தோல்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் மற்றும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் டுவிட்டரில் தங்களது பங்குக்கு வாழ்ந்தி இருந்தனர். இந்நிலையில் தற்போது சேவாக்கும், கோலியும்தான் தோல்வி அடையக் காரணம் என ரசிகர் பட்டாளம் கொதித்து வருகின்றனர். அதிலும் ஒரு மூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அவர்கள் இப்படி ஒரு நிகழ்வினை செய்துள்ளார்கள்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடி 85 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து கோப்பை இழந்தது. ஆனால் இந்த தொடரின் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என்று எதிர்பார்த்த நிலையில் தோல்வி அடைந்தது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

இந்த இறுதிப்போட்டிக்கு முன்னர் சேவாக் மற்றும் கோலி ஆகியோர் ட்விட்டரில் தங்களது வாழ்த்துக்களை இந்திய அணிக்கு கூறி இறுதிப் போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்களை கூறியிந்தனர். கடைசியில் இந்திய அணி தோற்று வெளியேற பிறகு தற்போது இந்த தோல்விக்கு சேவாக் மற்றும் கோலி ஆகியோர் கூறிய வாழ்த்து தான் காரணம் என்றும் இந்திய அணி ஐசிசி தொடர்களுக்கு முன் வீரர்கள் வாழ்த்து தெரிவிக்க கூடாது என்றும் ரசிகர் ஒருவர் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி சமூக மாற்றம் கோரும் நபர்கள் change.org என்ற தளத்தில் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் இதன் மூலம் அவர் மக்களின் ஆதரவையும் கோரியுள்ளார். அந்த வகையில் கோலி மற்றும் சேவாக் ஐசிசி தொடர்களில் இனிமேல் வாழ்த்து தெரிவிக்க கூடாது என்று தன் மனுவில் கூறியிருக்கிறார். மேலும் இதற்கு ஆயிரம் பேர் வரை ஆதரவு அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தக் கோரிக்கைக்கு 600 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

Sehwag

மேலும் இந்த மனுவில் சேவாக்கை விட கோலி மீது தான் இந்திய ரசிகர்கள் அதிக கோபத்தில் உள்ளனர். மேலும் அந்த ரசிகர் மனுவின் கீழ் கோலி மோசமான எதிர்மறை அதிர்வை உண்டாக்குகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர்கள் வாழ்த்துக் கூறுவதை நிறுத்தாவிட்டால் அவர்களது சமூக ஊடக கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement