தோத்தது மட்டுமல்ல. 2 இன்னிங்சிலும் இந்திய அணிக்கு ஏற்பட்ட பரிதாபம் – இதை கவனிச்சீங்களா ?

Eng-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆண்டர்சனின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 21 ரன்களுக்குள் முதல் 2 விக்கெட்டுகளை இழந்தது.

anderson 2

- Advertisement -

அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் மற்ற பவுலர்களும் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களில் சுருண்டு பரிதாப நிலைக்கு சென்றது. அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து தனது 423 ரன்களை குவிக்க 345 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

இந்த 2-வது இன்னிங்சின் போது ரோஹித், புஜாரா, கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடிய பட்சத்திலும் இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களால் ஏற்பட்ட ஒரு பரிதாப நிலையைதான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

pujara 2

ஆம் முதல் இன்னிங்சின் போது முதல் 2 விக்கெட்டுகளை 21 ரன்களில் இழந்த இந்திய அணியானது அடுத்த 8 விக்கெட்டுகளை 57 ரன்களுக்குள் இழந்தது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சில் ரோகித், புஜாரா, கோலி ஆகியோர் சிறப்பாக விளையாட ஒரு கட்டத்தில் இந்திய அணி 215 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற பலமான நிலையில் இருந்தது.

ENG

ஆனால் பின்னர் மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் 63 ரன்களுக்குள் இழந்தது. இப்படி இரண்டு இன்னிங்சிலும் கடைசி 8 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் அதாவது 70 ரன்களுக்குள் விட்டுக் கொடுத்தது இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த சறுக்கலை காண்பிப்பது மட்டுமின்றி இந்திய அணிக்கு பரிதாப நிலையையும் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement