- Advertisement -
இந்திய கிரிக்கெட்

31க்கு ஆல் அவுட்.. 4 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. ஹாட்ரிக்கால் மலேசியாயை தூளாக்கிய வைஷ்ணவி.. 2 வரலாற்று சாதனை

மலேசியாவில் ஐசிசி 2025 மகளிர் அண்டர் 19 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்தியா தங்களது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த நிலையில் இரண்டாவது போட்டியில் மலேசியாவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொண்டது.

அந்தப் போட்டி ஜனவரி 21ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய மலேசியா அணி இந்தியாவின் அற்புதமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 14.3 ஓவரில் 31 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

- Advertisement -

சுழலில் மாயாஜாலம்:

அந்த அணிக்கு எந்த வீராங்கனைகளுமே 6 ரன்கள் கூட தாண்டவில்லை. அதிகபட்சமாக அலியா ஹைரன் 5, ஹுஸ்னா 5 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக வைஷ்ணவி சர்மா 4 ஓவரில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட், ஆயுசி சுக்லா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். குறிப்பாக வைஷ்ணவி சர்மா இந்தப் போட்டியில் தான் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் மலேசியா கேப்டன் நுர் டனியா 1, நுரிமன் ஹிடயா 2 என 2 முக்கிய வீராங்கனைகளை அவர் அவுட்டாக்கினார்.

அதோடு நிற்காத அவர் 14வது ஓவரின் 2, 3, 4வது பந்துகளில் முறையே பிண்டி ரோஸ்லன் 3, இஸ்மா டனியா 0, சிடி நவாஸ் 0 என 3 வீராங்கனைகளை அடுத்தடுத்த 3 பந்துகளில் அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக மகளிர் அண்டர் 19 உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய மற்றும் ஆசிய வீராங்கனை ஆகிய 2 வரலாற்றுச் சாதனைகளை வைஷ்ணவி சர்மா படைத்துள்ளார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:

இதற்கு முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்த எந்த வீராங்கனைகளும் இந்த உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்ததில்லை. ஒட்டுமொத்த வரலாற்றில் தென்னாப்பிரிக்காவின் மடிசன் லேண்ட்ஸ்மேனுக்கும் பின் ஹாட்ரிக் எடுத்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையையும் வைஷ்ணவி பெற்றார். 2023 அண்டர்-19 மகளிர் உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக மடிசன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை முதல் முறையாக எடுத்திருந்தார்.

இதையும் படிங்க: மறுபடியும் கிடைக்காது.. கடைசி மூச்சு வரை இந்தியாவுக்கு கொடுக்க விரும்புறேன்.. கம்பேக் பற்றி ஷமி உருக்கம்

இறுதியில் 32 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கொங்காடி திரிஷா அதிரடியாக 27* (12), தமிழக வீராங்கனை கமலினி 4* (5) ரன்கள் எடுத்தனர். அதனால் 2.5 ஓவரில் 32-0 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதன் காரணமாக குரூப் ஏ பிரிவில் இந்திய கிரிக்கெட் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது.

- Advertisement -