41 ரன்ஸ்.. மித்தாலி ராஜை முந்திய மந்தனா அதிரடி சாதனை.. அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி

IND vs IRE
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் ஜனவரி பத்தாம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அடுத்ததாக களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் போராடி 238-7 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் கேபி லெவிஸ் அற்புதமாக விளையாடி 92 (129) ரன்கள் எடுத்தார். அவருடன் லே பால் 59 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 239 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள்.

- Advertisement -

மந்தனா சாதனை:

அதில் 6 பவுண்டரி 1 சிக்சரை பறக்கவிட்ட மந்தனா அதிரடியாக 41 (29) ரன்கள் குவித்து 70 ரன்கள் ஓப்பனிங் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்து அவுட்டனார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 95 போட்டிகளில் 4,000 ரன்கள் கடந்துள்ளார். அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 4000 ரன்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 112 போட்டிகளில் 4000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அவருடன் சேர்ந்து விளையாடிய அறிமுக வீராங்கனை பிரதிகா அரை சதத்தை அடித்து அசத்தினார். ஆனால் எதிர்ப்புறம் ஹர்லின் தியோல் 20, ஜெமிமா 9 ரன்களில் அவுட்டானார்கள். அடுத்ததாக வந்த மற்றொரு அறிமுக வீராங்கனை தேஜல் ஹசப்னிஸ் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அவருடன் சேர்ந்து அசத்திய பிரதிகா 89 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் தேஜஸ் 53* (46), ரிச்சா கோஸ் 8* (2) ரன்கள் எடுத்த உதவியுடன் 34.3 ஓவரில் 241-4 ரன்களை எடுத்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 20 வருஷமா நான் நேசிச்ச விஷயத்தில் இருந்து வெளியேறுகிறன்.. உருக்கமான ஓய்வை அறிவித்த – இந்திய வீரர்

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வென்ற இந்திய அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராகவும் அசத்த துவங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பிரதிகா ஆட்ட நாயகி விருதை வென்றார். மறுபுறம் அயர்லாந்து அணிக்கு அதிகபட்சமாக எமி மகுரி 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை

Advertisement