மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் இந்திய அணி. இப்படி மோசமாக சுருண்டதுக்கு – காரணம் இதுதான்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதால் இந்த போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய 40 ஓவர்களில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் இவ்வாறு 78 ரன்களுக்கு சுருண்டதற்கு சில முக்கிய காரணங்கள் பார்க்கப்படுகிறது. அதிலும் ஒரு விடயம் குறிப்பாக இந்திய அணியை தொடர்ந்து வருகிறது என்றே கூறலாம்.

அந்த விடயம் யாதெனில் இதுவரை அயல்நாட்டில் இந்திய அணி சமீபகாலமாகவே துவக்க வீரர்கள் சிறிது ஓவர்கள் நின்று பார்ட்னர்ஷிப் அமைத்தால் மட்டுமே போட்டியில் முன்னிலை பெறுகிறது. மற்றபடி துவக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டமிழந்தால் இந்திய அணியின் மிடில் ஆடர் ஆட்டம் காண்கிறது. இந்த போட்டியிலும் அதே நிலைமைதான் தொடர்ந்தது.

anderson 1

துவக்க வீரர் ராகுல் டக் அவுட் ஆகி வெளியேற அதன்பிறகு புஜாரா வந்து நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் கோலி, ரகானே என மிடில் ஆர்டரில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறியதால் பின் வரிசையில் களமிறங்கிய வீரர்கள் அழுத்தத்தை சந்திக்கின்றனர்.

Robinson-1

மிடில் ஆர்டரில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த அழுத்தத்தினால் டெய்ல் எண்டர்களும் விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தனர். இப்படி தொடர்ச்சியாக இந்திய அணி மிடில் ஆர்டரின் சொதப்பல் காரணமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குறைவான ரன்களுக்கு சுருள்வது வாடிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement