ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..
17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Adichadu yaaru ? Kozhandaingala Nanga @ChennaiIPL adicha adichadu kadaisi varaikkum marakama irukanum.Vanthutomnu sollu thirumbi vanthutomnu #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) October 4, 2020
இந்நிலையில் சி.எஸ்.கே அணி பெற்ற இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் முன்னணி வீரரான இம்ரான் தாஹீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டதாவது : “அடிச்சது யாரு..? குழந்தைங்களா நாங்க..? அடிச்சா அடிச்சது கடைசி வர மறக்கமா இருக்கனும். வந்துட்டோம்னு சொல்லும், திரும்பி வந்துட்டோம்னு எடுடா வண்டிய போடுடா விசில” என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றது மட்டுமின்றி அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. மேலும் ஹாட்ரிக் தோல்விக்கு பிறகு சி.எஸ்.கே அணிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி மீண்டும் சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.