“இது நாங்களா சேத்த கூட்டம் இல்ல”, “தானா சேந்த கூட்டம்” – தமிழில் ட்வீட் செய்து மற்ற ஐ.பி.எல் அணிகளை மிரளவிட்ட தாஹிர்

tweet
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி சிறப்பான சில வீரர்களை அணியில் சேர்த்து மட்டுமின்றி அதற்கு ஏற்றார் போல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

CSKvsSRH

- Advertisement -

தொடரின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி தற்போது 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தும் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாட நேற்றைய போட்டியில் எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி இன்னும் பலமான அணியாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் அனுபவ வீரரான 42 வயதான இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு டிவீட்டினை போட்டு எதிரணிகளை மிரட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் :

“இது சென்னை ஐபிஎல்”, “நாங்களா சேர்த்த கூட்டம் இல்ல தன்னால சேர்ந்த கூட்டம்”, “இது அன்பு சாம்ராஜ்யம் யாராலும் அழிக்க முடியாது”, எங்க வழி தனி வழி”, சீண்டாதீங்க என்று ரஜினியின் பஞ்ச் டயலாக் மூலம் தனது ட்வீட்டை வெளியீடு அதிரடி காட்டி உள்ளார்.

Tahir

மேலும் இந்த தொடரில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்ததாலும் அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சிஎஸ்கே அணியுடன் இருந்து வெற்றி பெறும்போது அணியை ஊக்குவித்து வரும் இம்ரான் தாகிரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement