மஞ்சள் சட்ட போட்ட தோணி சிங்கத்தை நேர்ல பாத்திருக்கியா..? தாஹிர் கலக்கல் ட்விட் !

tahir
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய ஹாட் டாபிக் கண்டிப்பாக தோனியாகத் தான் இருப்பார். நேற்று இரவு பெங்களூரு மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையேயான போட்டியில் த்ரில் வெற்றியை அடைந்தது சென்னை அணி. மேலும் இந்த போட்டியில் நம்ம தல தோனி மைதானத்தில் புயல் வேகத்தில் ஆடி சென்னை அணியை வெற்றியின் மடியில் கேத்தாக அமர வைத்தார்.

rayudu

- Advertisement -

சென்னை அணியின் வெற்றிக்கும் தோனியின் அதிரடியான ஆட்டத்திற்கு ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணியில் ஆடிவரும் இம்ரான் தாஹிர் , தோணியை தனது தனது புலமையில் பாராட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் இவரது தமிழ் புலமை கூ டிக்கொண்டிருக்கிறதே என்று வியந்து வருகின்றனர்.

நேற்று இரவு பெங்களூரில் நடந்த போட்டியில் முதலில் களம்மிறங்கிய பெங்களூரு அணி சென்னை அணியின் பந்துகளை தும்சம் செய்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான டீ வில்லியர்ஸ் 30 பந்துகலில் 68 ரன்களை அடித்து விலாசினார். இதனால் அந்த அணியின் எண்ணிக்கை 20 ஓவர் முடிவில் 205 தொட்டது.206 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை ராயடு மற்றும் தோனி கூட்டணியால் வெற்றி பெற்றது. அதிலும் சென்னை அணியின் தல தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் குவித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார்.

இந்த வெற்றி குறித்து அந்த அணியின் சூழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு என்னவெனில் காட்ல வேட்டையாடுற சிங்கத்தை பார்திருப்ப, காக்கி சட்டை போட்ட சிங்கத்தை பார்திருப்ப, மஞ்ச சட்டையை போட்ட மஹிந்திரா சிங்கத்தை பார்திருக்கியா ??? ஓங்கி அடிச்சா 110 மீட்டர் சிக்ஸ்டா , பக்கரய ? இது பொசுகுற கூட்டம் கொஞ்சம் தள்ளி நில்லு கண்ணை. எடுடா வண்டிய, போடுடா விசுல. என்று மாசன வசனத்தை தமிழில் பதிவிட்டு ரசிகர்களை அசத்தியுள்ளர்.

Advertisement