தென்னாபிரிக்க அணிக்காக நான் விளையாடினாலும் எனது இந்த ஆசை நிறைவேறாமல் போனது வருத்தம் – மனம்திறந்த தாஹிர்

Tahir-2

தென்ஆப்பிரிக்க அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் பிறந்தவர். ஆரம்ப காலகட்ட பயிற்சியை அங்கேயே தான் அவர் முடித்தார். மேலும் லாகூரில் பெரும்பாலான கிரிக்கெட்டை விளையாடியுள்ள அவர் எனது வாழ்நாளில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளை நான் பாகிஸ்தான் மண்ணில் தான் விளையாட கற்றுக்கொண்டேன்.

tahir

அதன் விளைவாக பாகிஸ்தான் அணியின் அண்டர் 19 மற்றும் பாகிஸ்தான் ஏ அணியில் இடம்பெற்றிருந்த அவர் அதே சமயம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது மிக வேதனையான விடயம் அதை நினைத்து நான் பெருத்த ஏமாற்றம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இன்றுவரை எனக்குள் பாகிஸ்தான் அணிக்காக விளையாட முடியாமல் போனது குறித்து வருத்தம் உள்ளது. ஆனால் கடவுளின் கிருபையால் 2006 ஆம் ஆண்டு என் மனைவியின் சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவிற்கு குடி பெயர்ந்தேன். பாகிஸ்தானை விட்டு வெளியேறிய போது வருத்தமாக இருந்தாலும் தென்ஆப்பிரிக்க அணியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

Tahir

இந்த முழுப் பெருமையும் என் மனைவியை சேரும் என்று ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு தற்போது பேட்டியளித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்க பெண்ணான அவரது மனைவி தில்தாரை மணந்த பின்னர் 2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க குடிமகனாக மாறி உடனே அந்த அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

Tahir

இதுவரை 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 157 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த உலக கோப்பை தொடர் (2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது) பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் டி20 போட்டிகளில் மட்டும் தென்னாபிரிக்க அணியில் விளையாடி வருகிறார். அது தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.