என்னை நீக்கினால் என்ன ? 50 வயசு வரைக்கும் நான் ரிட்டயர்டு ஆக மாட்டேன் – தெ.ஆ வீரர் ஆவேசம்

rsa

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களது வீரர்களின் பட்டியலை அறிவித்துவிட்டன. உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத கால இடைவெளியே உள்ள வேலையில் பல வீரர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பும், பல வீரர்களுக்கு ஏமாற்றமும் கிடைத்துள்ளது.

cup

அந்தவகையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் இந்த தொடருக்கான தங்களது அணியை அறிவித்தது. அதில் சீனியர் வீரர்களான டூபிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், கிரிஸ் மோரிஸ் ஆகியோரது பெயர்கள் இடம் பெறாததால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த இவர்களை விடுத்து அந்த அணி சில வீரர்களை தேர்வு செய்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

அதே போன்று தான் இந்த உலக கோப்பை தொடரில் புறக்கணிக்கப்பட்டது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் சீனியர் வீரர் இம்ரான் தாஹிர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலக கோப்பை தொடரில் நான் விளையாட தயாராக இருந்தேன். அப்படி இருந்தும் என்னை அணியில் இருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. கடந்த ஆண்டு அணியின் இயக்குனர் கிரேம் ஸ்மித் எனக்கு போன் செய்து நீங்கள் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tahir

மேலும் உங்களின் செயல்பாடுகளை அனைத்து ஆட்டங்களிலும் பார்த்து வருகிறேன். நிச்சயம் நீங்கள் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அது தவிர ஏ.பி.டி, டூபிளெஸ்ஸிஸ் போன்றோரிடமும் பேசப் போகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் என்னை யாரும் தொடரும் தொடர்பு கொள்ளவில்லை.

- Advertisement -

tahir

நான் 10 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளேன். இப்போது நான் அவர்களுக்கு பயனற்றவன் ஆகி விட்டேன். இந்த நீக்கம் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் நான் ஓய்வு பெற தற்போது திட்டமிடவில்லை. தேவைப்பட்டால் 50 வயது வரை கூட நான் விளையாட தயார் என்று ஆவேசமாக இம்ரான் தாஹிர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement