சி.எஸ்.கே அணியில் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா ? ரொம்ப வேதனையாக இருந்தது – மனம்திறந்த தாஹிர்

Tahir
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு சிறப்பாக நடந்துவரும் இத்தொடரில் சிஎஸ்கே அணிக்கு படுமோசமாக அமைந்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்ற 10 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி பெரிய விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

Tahir

- Advertisement -

சிஎஸ்கே அணியின் இந்த முக்கிய வீழ்ச்சிக்கு காரணமாக இம்ரான் தாஹிர் போன்ற அனுபவ வீரர்கள் அணியில் சேர்க்காததே என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டு 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக இருந்த அவருக்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் சில போட்டிகளின் போது அவர் வீரர்களுக்கு ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொண்டு சென்ற நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் எடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ள தாஹிர் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : சிஎஸ்கே ஒரு மிகச் சிறந்த அணி. நான் உலகம் முழுவதும் பல அணிகளில் விளையாடி உள்ளேன். ஆனால் சிஎஸ்கே போன்று குடும்பத்தையும் அன்பாக வழி நடத்துபவர்களை நான் பார்த்ததில்லை. சென்னையில் உள்ள ரசிகர்கள் அன்பானவர்கள்.

அங்கு விளையாடும் போது நான் அவர்களது கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன். ஒரு போட்டியில் நாம் விளையாடலாம் மற்றொரு போட்டியில் விளையாடாமல் போகலாம். ஆனால் சென்னை ரசிகர்கள் விளையாட்டைப் பற்றி பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் நமக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த சீசனில் நான் கூல்டிரிங்ஸ் எடுத்துக்கொண்டது பற்றி எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.

- Advertisement -

tahir

ஆனால் இதற்கு முந்தைய நாட்களில் ஒரு சீசனின் போது டு பிளேசிஸ் குளிர்பானங்களை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். அதை அப்போது பார்த்த நான் வேதனை பட்டுள்ளேன். டி20 போட்டிகளில் அவர் நல்ல ஸ்கோர் சராசரி வைத்திருந்தும், ஒரு சர்வதேச அணிக்கு கேப்டனாக இருந்தும் அவர் குளிர்பானங்களை எடுத்து ஓடிவந்தார். அதனை பார்த்த எனக்கு அப்போது மிகவும் வேதனையாக இருந்தது. இருப்பினும் அதனை நாங்கள் டீம் ஸ்பிரிட்டாக எடுத்துக்கொண்டோம்.

faf

கடந்த ஆண்டு அவர் இருந்தார் அதேபோல இந்த ஆண்டு நான் இருக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலையில் அவர் எப்படி உணர்ந்து இருப்பார் என்பது குறித்து இப்போது என்னால் உணர முடிகிறது. அவருடன் நான் இது குறித்து பேசியது இல்லை என்றும் நிச்சயம் எனக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் இம்ரான் தாஹிர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement