சி.எஸ்.கே அணி ஜெயிக்கனும்னா கூல்ட்ரிங்ஸ் தூக்குறது மட்டுமல்ல. என்ன வேணுனா செய்வேன் – நெகிழவைத்த சீனியர் வீரர்

CSK-1

கடந்த ஐபிஎல் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி பட்டைய கிளப்பிய தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த மூன்று வருடங்களாக விளையாடி வருகிறார். கரீபியன் லீக் தொடரிலும் அசத்திய இம்ரான் தாஹீர் தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட தற்போது வரை விளையாடவில்லை .

Tahir

தற்போது வரை சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடிவிட்டது. இதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. ஆனாலும் இவரைப் போன்ற மிகச் சிறந்த வீரருக்கு அணியில் தற்போது வரை வாய்ப்பு கொடுக்கவில்லை. சமீபத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் கடைசி 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இருந்தாலும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.இது குறித்து டுவிட் செய்துள்ளதாக தாஹீர் : நான் ஆடுகளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது பல வீரர்கள் எனக்கு ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்து இருக்கின்றனர்.

இப்போது அவர்களுக்கு நான் திரும்பச் செய்கிறேன் அவ்வளவுதான். இது என் கடமையும் கூட நான் அணியில் விளையாடுகிறேனா ? இல்லையா ? என்பது விஷயமல்ல அணி வெற்றி பெறுவது தான் முக்கியம். எனக்கு என் வாய்ப்பு வரும்போது மிகச் சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்திருக்கிறார் இம்ரான் தாஹிர்.

- Advertisement -

இம்ரான் தாஹீரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவினை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். மேலும் சி.எஸ்.கே அணி நிர்வாகமும் இம்ரான் தாஹீர் மீது பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.