இப்படியே போனால் பாகிஸ்தான் அணி வேலைக்காகாது. நானே களத்தில் இறங்குகிறேன் – பாக் பிரதமர் இம்ரான் கான்

- Advertisement -

பாகிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக ஒரு காலத்தில் வலம் வந்தது. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி அதற்கு நேர்மாறாக உள்ளது. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்று வெளியேறியது.

- Advertisement -

இதனையடுத்து 2023 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை தயார் படுத்தும் வேலையை இப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நாம் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்ள இப்போது இருந்தே தயாராக வேண்டும்.

ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்குள் அணியை சீர்படுத்தி தகுதியான நல்ல திறமை வாய்ந்த வீரர்களை அணியில் எடுத்து வரவேண்டும். அடுத்த உலகக் கோப்பைக்காக இப்போதே அதற்கான தொழில்முறை அணியை உருவாக்க துவங்குங்கள். அந்த அணியில் இடம்பெறும் வீரர்களும் சரியாகப் பொருந்த வேண்டும்.

Shaheen

அதற்கான வேலையில் பாகிஸ்தான் இறங்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கான ஆலோசனைகளை நேரடியாக அணியுடன் இணைந்து நானே வழங்குகிறேன். அடுத்த உலக கோப்பையில் பாகிஸ்தான் சாதிக்க வேண்டும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement