CSK vs GT : பேசாம ரிட்டையர் ஆகலாம், இம்பேக்ட் ரூல் வெச்சு தோனி 2024இல் விளையாட முடியாது – சேவாக் கூறும் காரணம் என்ன

Sehwag
- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய சென்னை நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்கிறது. இருப்பினும் நேற்று மழையால் ரத்து செய்யப்பட்ட அந்த போட்டி இன்று ரிசர்வ் நாளில் மீண்டும் நடைபெற உள்ளது. அதில் சுப்மன் கில் போன்ற உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் வீரர்களை கொண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தங்களது சொந்த ஊரில் சொல்லி அடித்து மீண்டும் கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSK vs GT

- Advertisement -

இருப்பினும் அதற்கு சவாலாக 4 கோப்பைகளை வென்றுள்ள சென்னை மகத்தான எம்எஸ் தோனி தலைமையில் அசத்தலாக செயல்பட்டு 5வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சாதனை படைத்த எம்எஸ் தோனி 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இருப்பினும் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த சீசனுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவாக் கருத்து:
ஆனால் இந்த வயதிலும் நிறைய இளைஞர்களுக்கு சவாலை கொடுக்கும் வகையில் அசத்தும் தோனி ஃபிட்டாக இருப்பதால் அடுத்த வருடமும் விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது. அந்த நிலையில் தற்போது ஒரு இன்னிங்ஸில் ஓய்வெடுத்து மற்றொரு இன்னிங்ஸில் முக்கிய நேரத்தில் மட்டும் விளையாடும் வாய்ப்பை கொடுக்கும் இம்பேக்ட் விதிமுறை வந்துள்ளதால் அதை பயன்படுத்தி தோனி அடுத்த வருடம் விளையாடுவார் என பிரெட் லீ, யூசுப் பதான் போன்ற நிறைய வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சொல்லப்போனால் சென்னையின் பயிற்சியாளார் ட்வயன் ப்ராவோவும் சமீபத்தில் அதையே தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீப காலங்களாகவே அதிரடியாக விளையாடக்கூடிய தோனி வயது காரணமாக பேட்டிங்கில் தடுமாறுவதை அனைவரும் அறிவோம். இருப்பினும் கண்ணிமைக்கும் நேரத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதிலும் எதிரணி வீரர்களை வலையில் சிக்க வைக்கும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்வதிலும் அசத்தும் தோனி சென்னையின் வெற்றிகளில் தொடர்ந்து விலைமதிப்பற்ற பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கும் கேப்டனாக செயல்படுவதற்கும் கண்டிப்பாக 20 ஓவர்கள் களத்தில் இருந்தாக வேண்டும் என்பதால் இம்பேக்ட் விதிமுறை தோனிக்கு எந்த வகையிலும் பயன்படாது என முன்னாள் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். எனவே இந்த வருடத்துடன் ஓய்வு பெற்று வருங்காலங்களில் சென்னையின் பயிற்சியாளராக அவர் செயல்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

Sehwag

“நீங்கள் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் 40 வயதிலும் கிரிக்கெட்டில் விளையாடுவது கடினமானதல்ல. எம்எஸ் தோனி இந்த வருடம் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை. குறிப்பாக அவருடைய முழங்கால் காயம் இன்னும் சரியாகவில்லை. அதனாலேயே அவர் கடைசி 2 ஓவரில் மட்டும் பேட்டிங் செய்ய வருகிறார். அந்த வகையில் இந்த சீசனில் அவர் விளையாடிய பந்துகளை கணக்கிட்டால் மொத்தமாக 40 – 50 பந்துகள் கூட இருக்காது. எனவே இம்பேக்ட் விதிமுறை எம்எஸ் தோனிக்கு பொருந்தாது”

இதையும் படிங்க:WTC : இந்திய டெஸ்ட் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை சேர்க்க என்ன காரணம் – விவரம் இதோ

“ஏனெனில் அவர் கேப்டன்ஷிப் வேலைக்காக மட்டுமே விளையாடுகிறார். பொதுவாக கேப்டனாக விளையாடுபவர்கள் தொடர்ந்து களத்தில் இருக்க வேண்டும். ஆனால் இம்பேக்ட் விதிமுறை என்பது ஒரு வீரர் ஃபீல்டிங் செய்யாமல் நேரடியாக பேட்டிங் செய்வதற்கு அல்லது பவுலர் பேட்டிங் செய்யாமல் இருப்பதற்கு பயன்படுவதாகும். மறுபுறம் தோனி கேப்டனாக 20 ஓவர்களும் விளையாட வேண்டிய வேலையை செய்கிறார். ஒருவேளை கேப்டனாக விளையாடாமல் போனால் அவரால் இம்பேக்ட் வீரராகவும் விளையாட முடியாது. எனவே விரைவில் அவரை பயிற்சியாளராக அல்லது இயக்குனராக மட்டுமே பார்க்க முடியும்” என்று கூறினார்.

Advertisement