வாழ்த்து சொல்ல போனது ஒரு குத்தமா ? வித்தியாசமான முறையில் ரன்அவுட் ஆன ஆப்கான் வீரர் – வைரலாகும் வீடியோ

Ikram

ஆப்கானிஸ்தான் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் தற்போது இந்தியாவில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் இக்ராம் ரன்அவுட் ஆன விதம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

அது யாதெனில் 27 ஆவது ஓவர் வரை பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை குவித்து இருந்தது. அப்போது இக்ராம் மற்றும் ரஹமத் ஷா ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் பேட்டிங் செய்யும்போது ரஹமத் பந்தை தட்டி விட்டு ஒருரன் ஓடி தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

எனவே அவரின் அரைசதத்தை பாராட்ட நினைத்த இக்ராம் மறுமுனையில் இருந்து அவருக்கு வாழ்த்து சொல்ல நடந்து வந்தார். ஆனால் பந்தை பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நேராக விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்ய அந்த பந்தை முடிக்காமலே அவர் கிரீசை விட்டு வெளியே சென்றுவிட்டார். விக்கெட் கீப்பர் கையில் பந்து இருக்கும் வரை அவர் கிரீசுக்குள் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் அதற்கு முன்னரே வெளியே வந்ததால் அதனை கணித விக்கெட் கீப்பர் அவரை ரன் அவுட் செய்தார். இந்த விடயம் மூன்றாவது அம்பயரின் பார்வைக்கு செல்ல ஆப்கானிஸ்தான் வீரர் அவுட் என்று முடிவானது. இவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிக அளவு பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.