அது மட்டும் திரும்பிருந்துச்சு என் வீடு உடைஞ்சுருக்கும் நானும் ரிட்டையர் ஆகிருக்கணும் – அஷ்வின் ஓப்பன்டாக்

Ashwin
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை அசாத்தியமான வெற்றியால் தோற்கடித்து 2வது போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி நடை போட்டு வருகிறது. இதனால் குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜொலிக்கும் இந்தியா அரை இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் ஆரம்பத்திலேயே கிட்டதட்ட உறுதி செய்துள்ளது என்று கூறலாம்.

Ashwin-and-Kohli

- Advertisement -

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித், ராகுல், சூரியகுமார் என 3 முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலே சொற்பரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை விராட் கோலியுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் ஒய்ட் பந்தில் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நல்லவேளை திரும்பல:
ஆனால் அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த பரபரப்புக்கு பதறாமல் அதே ஒயிட் வலையில் சிக்காமல் ஒரு எக்ஸ்ட்ரா ரன்னையும் பந்தையும் பெற்று கடைசி பந்தில் அனைத்து ஃபீல்டர்களும் உள்வட்டத்திற்கு உள்ளே இருந்தும் கூலாக தூக்கி அடித்து இந்தியாவின் சரித்திர வெற்றியை உறுதி செய்தார். அந்த சமயத்தில் வெறும் 1 எடுத்தாலும் 100ரன்கள் எடுத்ததற்கு சமமான ஆக்கபூர்வ செயல்பாட்டை  வெளிப்படுத்திய அவரை 82* (53) ரன்கள் குவித்து காப்பாற்றிய விராட் கோலி உட்பட அனைவரும் கொண்டாடி தீர்த்தார்கள்.

Ashwin

ஆனால் முகமது நவாஸ் வீசிய அந்த கடைசி ஓவரில் அடிக்காமல் விட்ட அந்த ஒய்ட் பந்து மட்டும் லேசாக திரும்பி தனது காலில் பட்டு தாம் அவுட்டாகியிருந்தால் அத்தோடு தம்முடைய கிரிக்கெட் கேரியர் முடிந்திருக்கும் என தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதே காரணத்தால் சென்னையில் தம்முடைய வீடும் ரசிகர்களால் சூறையாடப்பட்டிருக்கும் என்று கலகலப்புடன் பேசியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முகமது நவாஸ் வீசிய அந்த பந்து மட்டுமே லேசாக திரும்பி உங்களது காலில் பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் “ஒன்றுமில்லை வேகமாக உடைமாற்றும் அறைக்கு சென்று என்னுடைய டுவிட்டர் பக்கத்திற்கு வந்து என்னுடைய கிரிக்கெட் கேரியரில் அற்புதமான நேரங்களை கொடுத்த அனைவருக்கும் நன்றி. இது ஒரு மிகச் சிறந்த பயணமாக இருந்தது” என்று கூறியிருப்பேன்”

“மேலும் முதல் பந்து லெக் சைட் திசைக்கு சென்ற போது நிம்மதியடைந்த நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன். அத்துடன் 1 பந்தில் 1 ரன் என்ற நிலைமை வந்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் நிம்மதியடைந்தேன். மேலும் நல்ல வேலையாக என்னுடைய வீட்டை யாரும் கல்லை எறிந்து தாக்க மாட்டார்கள் என்றும் அப்போது மகிழ்ச்சியடைந்தேன்” என்று கூறினார். இதை தொடர்ந்து இந்தியா தன்னுடைய 3வது போட்டியில் அக்டோபர் 30ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement