விராட் கோலி இடத்தில் வேறுயாராவது இருதிருந்தா இந்நேரம் இதுதான் நடந்திருக்கும் – முன்னாள் இந்திய வீரர் கருத்து

Kohli-1
- Advertisement -

நடைபெற்று முடிந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தினம்தோறும் அம்புகளாக தன்னை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வழக்கம்போல சொற்ப ரன்களில் அவுட்டாகி அனைவருக்கும் ஏமாற்றத்தையே கொடுத்தார். ஏனெனில் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்து இருந்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சுமார் 3 வருடங்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். களமிறங்கினாலே சதமடிப்பார் என்ற அளவுக்கு கடந்த காலங்களில் அபாரமாக செயல்பட்ட அவர் இந்த மோசமான காலங்களிலும் 30, 50 போன்ற ரன்களை எடுத்தாலும் அனைவரும் அவரை பார்ம் அவுட் என்றே கருதுகின்றனர்.

Virat-Kohli

- Advertisement -

இதிலிருந்து விடுபடுவதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்சிப் பொறுப்புகளை படிப்படியாக ராஜினாமா செய்ததால் அழுத்தமின்றி சுதந்திர பறவையாக பேட்டிங் செய்து விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, 14 வருட கேரியரில் முதல் முறையாக கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களை கூட தாண்டாதது என முன்பை விட அவர் சுமாராக செயல்பட்டு வருகிறார். அதனால் பொறுமையிழந்த அனைவரும் எப்போது சதமடிப்பார் என்று பேச்சுக்களை விட்டுவிட்டு அணியில் இருந்து நீக்குமாறு கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

பெருகும் ஆதரவு:
குறிப்பாக பெரிய பெயரை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க விடாமல் விளையாடுவீர்கள் என்ற வகையில் முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் விமர்சித்தது பெரிய புயலை கிளப்பியது. இருப்பினும் 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களை அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோரது வரிசையில் ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ள அவருக்கு கிரேம் ஸ்வான், கெவின் பீட்டர்சன் உட்பட நிறைய வெளிநாட்டு வீரர்கள் ஆதரவை கொடுக்கின்றனர்.

Kohli-1

அதிலும் இந்த மோசமான தருணத்தில் விமர்சிக்காமல் ஆதரவு கொடுத்தால் தான் அவரால் பார்முக்கு திரும்ப முடியும் என்ற வகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் “இதுவும் கடந்து போகும்” என்று ட்வீட் போட்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படி எதிர்ப்புகளுக்கு ஈடான ஆதரவைப் பெறும் அளவுக்கு வரலாற்றில் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்ற காரணத்தாலேயே இந்திய அணி நிர்வாகமும் அவரை பார்ம் என்பதை காரணம் காட்டி இதுவரை நீக்காமல் இருந்து வருகிறது.

- Advertisement -

ட்ராப் பண்ணிருப்பாங்க:
இந்நிலையில் விராட் கோலியின் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் இந்நேரம் நிச்சயம் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று முன்னாள் இந்திய வீரர் சயீத் கிர்மனி தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் தீபக் ஹூடா போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் அவரிடம் இருக்கும் அனுபவமும் திறமையும் வேறு யாரிடமும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் அதற்காகவே அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விராட் கோலி விளையாட தகுதியானவர் என்று ஆதரவை தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக பார்மை இழந்து தவிக்கும் விராட் கோலி அதை மீட்டெடுத்து விட்டால் யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு அபாரமாக செயல்படுவார் என்று கூறியுள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

Kirmani

“விராட் கோலியிடம் ஏராளமான அனுபவம் உள்ளது. அவர் டி20 உலகக்கோப்பை அணியில் நிச்சயம் இடம் பெற வேண்டும். ஒருமுறை அவர் பார்முக்கு திரும்பி விட்டால் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர் போட்டியை தலைகீழாக மாற்றும் திறமை பெற்றவர். அவரைப் போன்ற அனுபவமும் திறமையும் பெற்றுள்ள ஒருவர் உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்றே கூறுவேன்”

- Advertisement -

“தற்போதைய இந்திய அணியில் அவரின் இடத்திற்கு நிறைய போட்டி உள்ளது. ஒருவேளை அந்த இடத்தில் விராட் கோலி மட்டுமல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் நிச்சயம் இந்நேரம் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். இருப்பினும் இதற்கு முந்தைய காலங்களில் அபாரமாக செயல்பட்ட அவருக்கு அதனுடைய பலனாக இந்த மோசமான காலங்களில் வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : எல்லாம் சரி, உடம்பை இன்னும் கொஞ்சம் கொறச்சா இன்னும் சூப்பரா விளையாடுவீங்க – இந்திய வீரருக்கு அக்தர் அட்வைஸ்

டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் டி20 அணியின் விராட் கோலியை நீக்குவதில் எந்த தவறுமில்லை என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியிருந்தார். அந்த நிலைமையில் அவரது தலைமையில் விளையாடி 1983 உலக கோப்பையை வென்ற சயீத் கிர்மனியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement