ஐ.பி.எல் நடக்காமல் போனால் எத்தனை கோடி நஷ்டம் ஏற்படும் தெரியுமா ? – இதில் பி.சி.சி.ஐ க்கு ஏற்படும் பாதிப்பு இதுதான்

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் 13 ஆவது ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி திட்டமிட்டபடி துவங்கி இருக்கவேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 15ஆம் தேதி என்றும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகத்தைப் பார்க்கும்போது கண்டிப்பாக ஐபிஎல் தொடர் நடைபெறாது என்று தோன்றுகிறது.

IPL

- Advertisement -

இவ்வாறு போட்டிகள் நடக்காமல் போனால் ஐபிஎல் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு 3,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் பங்குகள் இவ்வாறு பிரிக்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை 16347 கோடி ரூபாய்க்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அடுத்த 5 வருடத்திற்கான உரிமத்தை ஸ்டார் நிறுவனத்திடம் பிசிசிஐ கொடுத்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் இந்த வருடத்தின் பங்கு 3869 கோடி ஆகும். இது தொலைக்காட்சி இழப்பு ஆகும். மேலும் விவோ நிறுவனத்திற்கு 5 வருடத்திற்கான டைட்டில் ஸ்பான்சராக 2000 கோடிக்கு விற்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் 400 கோடி இழப்பு ஏற்படும். அதனை தாண்டி கூடுதலாக சிறுசிறு ஸ்பான்சர்களுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

Star-sports

இவ்வாறாக மொத்தம் 3869 கோடி ரூபாய் இழப்பு இந்த வருடம் மட்டும் ஏற்படும். மேலும் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு. ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது. என்பதால் இது அனைத்து தரப்பிரனுக்கும் சிக்கலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனை தாண்டி வீரர்களின் சம்பள கணக்குப்படி ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே 15 சதவீத சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படும். பின்னர் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதும் தொடர் முடிந்த பின்னரும் 65+20 சதவீத சம்பளம் கொடுக்கப்படும்.

Csk

தற்போது வரை எந்த ஒரு வீரருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை இதுவும் ஒரு இழப்பு தான். இப்படி ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் அறிமுக வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் சற்று பெரிய பாதிப்ப்ய் ஏற்படும். ஏனெனில் இந்த வருடம் சில வீரர்கள் தாங்கள் வாழ்நாளில் எதிர்பாரா அளவு சில கோடிகளுக்கு ஏலம் போனார்கள். இந்த தொடர் நடக்காவிடில் அவர்களுக்கு இந்த ஏலத்தொகையில் இருந்து எந்த தொகையும் பெறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement