நானாக இருந்தால் ஹர்ஷல் படேலுக்கு பதில் அவரை செலக்ட் பண்ணிருப்பேன் – ஸ்ரீகாந்த் மீண்டும் ஆதரவு

Harshal-2
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் நடையை கட்டிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனையுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்குகிறது. ஆனால் அவர்களது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்ற இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

IND vs PAK Deepak Hooda INdia

- Advertisement -

அந்த தொடரில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஏனெனில் ரன்களை வள்ளலாக வாரி வழங்கிய ஆவேஷ் கானை நீக்கும் போது அவருக்கு பதில் தேர்வு செய்வதற்கு மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் ஹர்திக் பாண்டியா 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அதனால் அனுபவமும் திறமையும் வாய்ந்த தீபக் சஹர், முகமத் ஷமி ஆகியோரை உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

ஷமிக்கு வாய்ப்பில்லை:
ஆனால் அதற்கு செவி சாய்க்காத தேர்வுக்குழு அவர்களை ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளது நிறைய பேரை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதிலும் கடந்த வருடம் டி20 உலக கோப்பையில் முழுமையாக விளையாடிய முகமது ஷமி 30 வயதை கடந்து விட்டார் என்பதால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக மொத்தமாக கழற்றிவிடப்பட்டார். ஆனால் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணியில் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி நல்ல பார்மில் இருக்கும் அவர் ஆசிய கோப்பை தோல்வியால் வேறு வழியின்றி ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது நிறைய முன்னாள் வீரர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Shami

ஏனெனில் உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு உலக கோப்பையில் வாய்ப்பளிக்க தேர்வுக்குழு தயங்குவது ஏன் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ள ஹர்ஷல் படேலுக்கு பதில் ஷமியை தேர்வு செய்திருப்பேன் என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வுக்குழுவை சாடியுள்ளார்.

- Advertisement -

2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த பெருமைக்குரிய அவர் இதுபற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “முகமது ஷமி இந்த அணியில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறீர்கள். மிகவும் உயரமான கைகளைக் கொண்ட ஆக்ஷன் நிறைந்த அவர் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் பவுன்ஸ்களை சிறப்பாக கையாள்வார். மேலும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்தை வெளிப்புறம் எடுக்கும் திறமை பெற்றுள்ள அவர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக உள்ளே கொண்டு வரும் திறமை பெற்றுள்ளார். அதனால் முதல் 3 ஓவர்களில் அவர் 2 – 3 விக்கெட்டுகளை உங்களுக்கு எடுத்துக் கொடுப்பார்”

Srikkanth

“அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயம் அவரை தேர்வு செய்திருப்பேன். அதிலும் ஹர்ஷல் படேலுக்கு பதில் தேர்வு செய்திருப்பேன். ஹர்ஷல் படேல் நல்ல பவுலர் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஷமி தான் சரியானவர். அதாவது ஆஸ்திரேலியாவில் இந்த தொடர் நடைபெறும் நிலையில் அவர் டெஸ்ட் அல்லது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட தகுதியானவர் என்று நீங்கள் சொல்ல முடியாது. அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். எனவே ஷமி நிச்சயமாக அணியில் இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : அந்த விஷயத்தில் விராட் கோலியின் தகுதியில் பாதி கூட வரமாட்டார் – ரோஹித் சர்மா பற்றி பாக் வீரர் விமர்சனம்

ஒரு கட்டத்தில் இந்திய டி20 அணியில் இனிமேல் பார்க்க முடியாது என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க தொடரில் ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளதே பெரிய மாற்றமாகும். ஒருவேளை அதில் அவர் அசத்தும் பட்சத்தில் கடைசி நேரத்தில் உலகக்கோப்பை அணியில் மாற்றம் நிகழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement