IND vs ENG : அவர மட்டும் 30 ரன்னுக்குள்ள அவுட் செய்துவிட்டால் எங்களின் வெற்றி உறுதி – மைக்கேல் வாகன் கருத்து

Vaughan
- Advertisement -

பர்மிங்காம் நகரில் இருக்கும் எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 1-ஆம் தேதியன்று மதியம் 3.30 மணிக்கு இங்கிலாந்து – இந்திய அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. கடந்த வருடம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அப்போதைய விராட் கோலி தலைமையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த இந்தியா 5 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றது. அதில் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை பதம் பார்த்த இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது.

INDvsENG 1

- Advertisement -

இருப்பினும் இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவாக மாறியுள்ள இங்கிலாந்து இப்போட்டியில் வென்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிர போராட உள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள சவாலை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா சமாளித்து 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியாவுக்கு சரித்திர வெற்றியை பெற்று கொடுப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

சதமடிப்பாரா கிங் கோலி:
அதனால் கடைசி நேரத்தில் பின்னடைவை சந்தித்துள்ள இந்தியாவை கேப்டன்ஷிப் அனுபவமில்லாத வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் 35 வருடங்கள் கழித்து இந்தியாவை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ள பும்ரா தலைமையில் விராட் கோலி உட்பட எஞ்சிய அனைத்து வீரர்களும் வெற்றிக்காக போராட உள்ளனர். அதுபோக இப்போட்டியில் நீண்ட நாட்களாக அடம்பிடித்து வரும் 71-ஆவது சதத்தை அடித்து விராட் கோலி இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

kohli

ஏனெனில் ஜாம்பவான் சச்சினுக்கு பின் கடந்த பல வருடங்களாக அவரைப்போலவே ரன் மெஷினாக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள அவர் 2019க்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கு மேலாக 100 போட்டிகளுக்கு மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதனால் கடும் விமர்சனம் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள அவர் இப்போட்டியில் சதமடித்து ஏற்கனவே 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெறுவதற்கு கேப்டனாக பெற்றுக்கொடுத்த வெற்றியை இம்முறை பேட்ஸ்மேனாக பினிஷிங் செய்து கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

ராசியான எட்ஜ்பஸ்டன்:
மேலும் இப்போட்டி நடைபெறும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் கடைசியாக கடந்த 2018இல் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி 149, 51 என 2 இன்னிங்சிலும் சேர்த்து 200 ரன்கள் அடித்து வெற்றிக்காக போராடிய போதிலும் எஞ்சிய வீரர்கள் கைகொடுக்க தவறியதால் வெற்றியை ருசிக்க முடியவில்லை. இருப்பினும் ஜாம்பவான் சச்சினுக்கு பின் இம்மைதானத்தில் சதமடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவருக்கு இம்மைதானம் ராசியானதாக அமைந்துள்ளதால் இப்போட்டியில் சதமடிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் என்னதான் கில், புஜாரா போன்ற முக்கிய வீரர்கள் இருந்தாலும் இந்திய பேட்டிங்கின் கருப்பு குதிரையாக கருதப்படும் விராட் கோலியை இப்போட்டியில் 30 ரன்களுக்குள் அவுட் செய்ய இங்கிலாந்து முயற்சிக்க வேண்டும் என்று அதன் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கூறியுள்ளார். அப்படி செய்தால் இங்கிலாந்தின் வெற்றி எளிதாகும் இல்லையேல் இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் உற்று நோக்கக் கூடிய இந்திய வீரர் என்றால் அது விராட் கோலி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயணித்து பாருங்கள் இதே மைதானத்தில் அவர் வரலாற்றின் ஒரு மிகச்சிறந்த சதத்தை பதிவு செய்துள்ளார். அவர் இம்முறையும் அதற்காக காத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடைசியாக அவர் 3 இலக்க ரன்களை தொட்டு எவ்வளவு நாட்களாகிறது”

vaughan

“அதை விராட் கோலி தொட்டு நீண்ட நீண்ட நாட்களாகிறது. எனவே அவர் இப்போட்டியில் முதலில் 30 ரன்களை தொட்டால் நிச்சயம் அந்த 3 இலக்க ரன்களை தொடுவார் என்று நான் கணிக்கிறேன். ஏனெனில் அவர் அதற்காக ரொம்ப காலங்கள் காத்திருக்கிறார். எனவே விராட் கோலி தான் இப்போட்டியில் நான் ஆவலுடன் காத்திருக்கும் இந்திய வீரர்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs ENG : 45 சொதப்பல்களுக்கு மீண்டும் வாய்ப்பு, ஒரு அசத்தலுக்கு ஏன் வாய்ப்பில்லை – தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

அத்துடன் சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 சதங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாடி இங்கிலாந்துக்கு அற்புதமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து நல்ல பார்மில் இருக்கும் ஜானி பேர்ஸ்டோ மற்றும் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மோதும்போது இப்போட்டியில் அனல் தெறிக்கப் போவதை பார்க்க ஆவலுடன் உள்ளதாக மைக்கல் வாகன் கணித்துள்ளார்.

Advertisement