- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பீர் மாதிரி கோச் எங்களுக்கு வேண்டாம்.. 75% வெற்றியை பாழாக்க விரும்பல.. ஐஸ்லாந்து கிண்டல்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் 2024 முதல் செயல்பட்டு வருகிறார். பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் சுற்றுப்பயணத்திலேயே அவரது வழிகாட்டுதலில் இலங்கைக்கு எதிராக இந்தியா 30 வருடங்கள் கழித்து ஒருநாள் தொடரில் தோற்றது. சொந்த மண்ணில் 2012 முதல் 12 வருடங்களாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இந்தியா உலக சாதனை வெற்றி நடை போட்டு வந்தது.

ஆனால் இந்தியாவின் அந்த உலக சாதனை கடந்த நியூசிலாந்து தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் சந்தித்த ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அதனால் 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிடம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது.

- Advertisement -

கம்பீர் வேண்டாம்:

அத்துடன் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தது. 2வது போட்டியிலும் திண்டாட்டமாக விளையாடும் இந்தியா 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்கும் அபாயத்தில் சிக்கியுள்ளது.

மொத்தத்தில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 ஆசியக் கோப்பையைத் தவிர்த்து கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா பெரும்பாலான தொடர்களில் படுதோல்விகளை சந்தித்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணிலேயே வெல்ல முடியாமல் இந்தியா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனால் கௌதம் கம்பீருக்கு எதிராக இந்திய ரசிகர்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

ஐஸ்லாந்து கிண்டல்:

இந்நிலையில் கௌதம் கம்பீர் தங்களுடைய அணியின் பயிற்சியாளராக வேண்டாம் என்று கத்துக் குட்டியான ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏனெனில் 2025 காலாண்டில் ஏற்கனவே தாங்கள் 75% விகிதத்தில் வெற்றி பெற்று வருவதாக ஐஸ்லாந்து கூறியுள்ளது. அதை கௌதம் கம்பீர் போன்ற சுமாரான பயிற்சியாளரை நியமித்து பாழாக்க விரும்பவில்லை என்றும் ஐஸ்லாந்து தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 736 நாள் ஆச்சு.. இதெல்லாம் சரியா?.. பேசாம பும்ராவுக்கு ரிட்டயர்மென்ட் குடுத்துடுங்க – ரசிகர்கள் புலம்பல்

இது பற்றி ரசிகர்களின் கேள்விக்கு ஐஸ்லாந்து வாரியம் ட்விட்டரில் பதிவித்துள்ளது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் எங்களுடைய தேசிய அணியின் புதிய பயிற்சியாளராக அழைக்கப்பட மாட்டார் என்று எங்களுடைய அனைத்து ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த இடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளது. அத்துடன் நாங்கள் 2025இல் விளையாடிய உங்களுடைய போட்டிகளில் 75% வெற்றிகளைப் பெற்றுள்ளோம்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளது.

- Advertisement -