பி.சி.சி.ஐ க்கு ஜூன் 1 ஆம் தேதி கெடு வைத்துள்ள ஐ.சி.சி – முக்கிய தொடர் நடப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

BCCI

2021ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை டி20 தொடர், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறும் என்று இதற்கு முன்னதாகவே ஐசிசி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதற்குப் பின்பு பல்வேறு கொரானா விதிமுறைகளின் படி இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் 14வது சீசனில், பயோ புபுள் வளையத்தையும் தாண்டி தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களுக்கு கொரனா தொற்று பரவியதால், நடப்பு ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளையும் காலவரையின்றி ஒத்தி வைத்திருக்கிறுது பிசிசிஐ. இந்தியாவில் கொரானா தொற்றானது இப்படி கோரத்தாண்டவம் ஆடி வருவதால், இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பயும் இந்தியாவில் நடைபெறாது என்றே கூறப்படுகிறது.

மேலும் வருகிற ஜூன் 01ஆம் தேதி, இந்த ஆண்டின் டி20 உலகக் கோப்பையை எந்த நாட்டில் நடத்துவது என்பது குறித்த ஆலோசனையை ஐசிசி மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கிடையில் உலகக் கோப்பை டி20 தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி ஆலோசனை செய்வதற்காக வருகிற 29ஆம் தேதி ஒரு சிறப்பு பொதுக் கூட்டத்தை நட்தப்போவதாக தற்போது அறிவித்துள்ளது பிசிசிஐ.

- Advertisement -

மே 29ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த சிறப்பு பொது கூட்டதில், டி20 உலகக் கோப்பையின் நிகழ்ச்சி நிரல்களை எவ்வாறு இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தலாம், நாளுக்கு நாள் மாறி வரும் கொரோனா தொற்றின் பரவல், தொடரில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? அதனை எப்படி வெற்றிகரமாக கையாள்வது குறித்த முக்கிய முடிவுகளை பிசிசிஐ எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரை எப்படியாவது இந்தியாவிலேயே நடத்த ஐசிசியிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதற்காகதான் பிசிசிஐ இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

BCCI

இதற்கு முன்னராக உலக கோப்பை டி20 தொடரின் போட்டிகள் அனைத்தும், இந்தியாவில் உள்ள அஹமதாபாத், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடத்த திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மைதானங்கள் இருக்கும் நகரங்களில் கொரானா தொற்று பரவிலின் தாக்கம் குறித்தும், போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அந்தந்த மைதான நிர்வாகங்களுடனும் பிசிசிஐ ஆலோசனை செய்யவிருக்கிறது. எனவே அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு, ஜூன் 01ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐசிசி கூட்டத்தில், இந்தியாவில் டி20 உலக கோப்பை நடத்துவற்கான சாத்தியக் கூறுகளை பிசிசிஐ சமர்பிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

bcci

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, வீரர்களுக்கு கொரான தொற்று பரவியது. ஆனால், இப்போது ஒரு சர்வதேச தொடரை இந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்வதால், ஐபிஎல்லில் கடைபிடிக்கப்பட்ட கொரானா விதிமுறைகளை விட, மிகக் கடினமான விதிமுறைகளை பிசிசிஐ கையாளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement