டி20 உ.கோ 2024 : இந்தியா – இங்கிலாந்து அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்

IND vs ENG
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்குமென உறுதியாக எதிர்பார்க்கலாம். ஏனெனில் கடைசியாக நடந்த 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து கடைசியில் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக ஜொலிக்கிறது.

இம்முறையும் கடந்த உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஜோஸ் பட்லர் அந்த அணியின் கேப்டனாகவும் துவக்க வீரராகவும் களமிறங்குவது இங்கிலாந்தின் பலமாகும். அவருடன் ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா அணியில் அபாரமாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் ஃபில் சால்ட் மற்றொரு துவக்க வீரராக களமிறங்க உள்ளார். அதே போல ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடக்கூடிய விக்கெட் கீப்பராக திகழ்கிறார்.

- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து:
ஹரி ப்ரூக் வளர்ந்து வரும் திறமையான இளம் பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளார். அவர்களை விட ஆர்சிபி அணியில் அடித்து நொறுக்கிய வில் ஜேக்ஸ், அதிரடியான லியாம் லிவிங்ஸ்டன், அனுபவத்தைக் கொண்ட மொய்ன் அலி ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் தரமான பகுதி நேர பவுலர்கள் என்பது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பலமாகும். அத்துடன் 2022 டி20 உலகக் கோப்பை தொடர்நாயகன் விருது வென்ற சாம் கரணும் ஆல் ரவுண்டராக வலு சேர்க்கிறார்.

இது போக விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களை அடில் ரசித் 2024 இந்திய டெஸ்ட் தொடரில் அசத்திய டாம் ஹார்ட்லி ஆகியோர் இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சு துறையை வலுப்படுத்துகிறது. இவர்களுடன் கிறிஸ் ஜோர்டானை தவிர்த்து காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர், ரீஸ் டாப்லி, மார்க் வுட் ஆகியோரால் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு துறையும் வலுவுடன் காட்சியளிக்கிறது.

- Advertisement -

மறுபுறம் ரோஹித் சர்மாவுக்கு நிகராக அதிரடியாக விளையாடும் அளவுக்கு ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் இந்தியாவுக்கு பலம் சேர்க்கிறார். அவர்களைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி எந்த நிலையிலும் வெற்றி பெற்றிருக்கக் கூடிய தரத்தை கொண்டுள்ளார். 4வது இடத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் இந்தியாவுக்கு கை கொடுப்பார் என்று நம்பலாம்.

அவர்களைத் தொடர்ந்து ரிசப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய கீப்பர்கள் 2024 ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடிய நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவர்கள் தொடர்ச்சியாக அசத்தியதில்லை என்பதை வரலாறு சொல்கிறது. அத்துடன் இந்த டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீச மாட்டார்கள் என்பது பின்னடைவாகும். அதே போல ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா சுமாரான ஃபார்மில் இருப்பதும் சிவம் துபே பந்து வீசுவாரா என்பது தெரியாததும் இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் ஜடேஜா, அக்சர் பட்டேல் பந்து வீச்சில் அசத்துவார்கள் என்றாலும் பேட்டிங்கில் எப்போதாவது மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றனர். அதே போல குல்தீப் யாதவ் அற்புதமான ஃபார்மில் இருந்தாலும் சஹால் ரன்களை வாரி வழங்குவது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது. இறுதியாக பும்ராவை தவிர்த்து அரஷ்தீப் சிங், சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சு துறையில் துல்லியமாக செயல்படுபவர்களாக இல்லை.

இதையும் படிங்க: இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட பின்னர் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ஹர்ஷல் படேல்

எனவே இம்முறையும் அனைத்து வீரர்களும் சேர்ந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் இங்கிலாந்தை வீழ்த்த முடியும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 12 வெற்றிகளும் இங்கிலாந்து 11 வெற்றிகளும் பெற்று கிட்டத்தட்ட சமமான பலத்துடன் இருக்கின்றன.

Advertisement