இந்தியா – இங்கிலாந்து செமி ஃபைனல் நடக்கும் ப்ரோவிடன்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

Gayana Providence Stadium
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பொறுத்த வரை ஜோஸ் பட்லர் தலைமையில் பிலிப்ஸ் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, பேர்ஸ்டோ, அடில் ரசித், ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற தரமான வீரர்களைக் கொண்டுள்ளது. எனவே இந்தியாவை தோற்கடித்து ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் இங்கிலாந்து தயாராகியுள்ளது.

மறுபுறம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்டிக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற தரமான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். மேலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து அணிகளையும் தோற்கடித்த இந்தியா இதுவரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இம்முறை வீழ்த்தி ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் இந்தியா போராட உள்ளது.

- Advertisement -

கயானா மைதானம்:
அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸின் கயானா நகரில் உள்ள ஜார்ஜ்டவுன் நகரில் இருக்கும் ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 2010 முதல் டி20 கிரிக்கெட்டை நடத்தி வரும் இம்மைதானத்தில் இதுவரை 18 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 6 முறையும் சேசிங் செய்த அணி 9 முறையும் வென்றுள்ளது. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

இம்மைதானத்தில் விளையாடிய 3 டி20 போட்டிகளில் இந்தியா 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 12 போட்டிகளிலும் இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் மோதிய 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் கயானா நகரில் ஜூன் 27ஆம் சராசரியாக 60% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பிட்ச் ரிப்போர்ட்:
இதர வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களை விட கயானா சுழலுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதுவும் இப்போட்டி பகல் நேரத்தில் நடைபெறுகிறது. அங்கே ஸ்பின்னர்கள் மிடில் ஓவரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 133. அதிகபட்ச ஸ்கோர் 14 வருடங்களுக்கு முன்பாக இங்கிலாந்து 191/5 வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: வார்னருடன் இருக்கும் விராட் கோலி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குழப்பத்தை ஏற்படுத்திய ஐ.சி.சி – என்ன நடந்தது?

குறைந்தபட்ச ஸ்கோர் இந்த வருடம் உகாண்டா 39க்கு ஆல் அவுட்டாகி பதிவு செய்துள்ளது. எனவே இங்கே ரன்கள் குவிப்பதற்கு பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையை உணர்ந்து விளையாடுவது அவசியமாகும். மேலும் இங்கே நேரம் செல்ல செல்ல பிட்ச் ஸ்லோவாகும். எனவே மழைக்கான வாய்ப்பிருப்பதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் அடிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement