- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – வங்கதேசம் போட்டி நடைபெறும் ஆன்டிகுவா மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருக்கின்றனர்.

மேலும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா இத்தொடரில் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. எனவே கொஞ்சம் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்தை நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியா தோற்கடிக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதற்கு லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்தபிசூர் போன்ற ஓரிரு தரமான வீரர்களை கொண்ட வங்கதேசம் சவாலை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -

ஆன்டிகுவா மைதானம்:
இப்போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஆன்டிகுவா நகரில் இருக்கும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 22ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. கடந்த 2007இல் தோற்றுவிக்கப்பட்டு 10,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 2010 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் இதுவரை நடைபெற்ற 18 போட்டிகளில் 11 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளது. 7 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் முறையாக இப்போது தான் இந்திய அணி விளையாட உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 13 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 12 வெற்றிகளைப் பெற்று வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. வங்கதேசம் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ஆன்டிகுவா நகரில் போட்டி நாளன்று 20% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே மழை லேசான குறுக்கீடு செய்தாலும் முடிவு கிடைக்கும் அளவுக்கு இப்போட்டி நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
ஆன்டிகுவா பிட்ச் திறமையை வெளிப்படுத்தும் அனைவருக்குமே சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் ஸ்பின்னர்கள் இங்கே மிடில் ஓவர்களில் கொஞ்சம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர். அதே போல காற்றோட்டமான மைதானம் என்பதாலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

- Advertisement -

அதே சமயம் பவுண்டரி எல்லைகள் பெரியது கிடையாது என்பதால் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்கலாம். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 132. இங்கே பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 194/4. அதை நேற்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா எடுத்தது.

இதையும் படிங்க: கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – விவரம் இதோ

அதே சமயம் இதே உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 47 ரன்களுக்கு சுருண்ட ஓமன் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. வரலாற்றில் இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகள் நிறைய வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோர் அடிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -