சூப்பர் 12 சுற்றுக்கு குட் பைய் சொன்ன ஐசிசி, 2024 டி20 உலக கோப்பையின் புதுமையான ஃபார்மட், அணிகள் – மொத்த விவரம் இதோ

T20 World Cup Captains 2022
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பிய தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இம்முறை ஐபிஎல் போன்ற இதர டி20 தொடர்களை மிஞ்சும் வகையில் முதல் போட்டியிலேயே ஆசிய சாம்பியன் இலங்கையை நமீபியாவும் வெற்றிகரமான வெஸ்ட் இண்டிஸை ஸ்காட்லாந்தும் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தன. அதுபோக கடைசியில் சாம்பியன் பட்டம் பெற்ற இங்கிலாந்தை அயர்லாந்தும் பாகிஸ்தானை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்பேவும் தோற்கடித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தன.

England T20 World Cup

- Advertisement -

மேலும் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே வெளியேறிய நிலையில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா நூலிலையில் ரன் ரேட் அடிப்படையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறியதால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் செமி ஃபைனலுக்குள் நுழைந்து நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதனால் 1992 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாய்ச்சவடால் விட்ட அந்த அணியை ஃபைனலில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 30 வருடங்கள் கழித்து பழி தீர்த்து 2வது கோப்பையை முத்தமிட்டது.

மறுபுறம் 15 வருடங்கள் கழித்து இத்தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு பரம எதிரியான பாகிஸ்தானை முதல் போட்டியில் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் அசாத்தியமான வெற்றியை சுவைத்தது மட்டுமே ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் லீக் சுற்றில் அசத்திய இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. அப்படி அனல் பறக்க நடைபெற்ற டி20 உலக கோப்பையின் அடுத்த தொடர் வரும் 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

INDia

புதிய பார்மட்:

பொதுவாக உலகக் கோப்பை என்றால் நிறைய அணிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால் சமீப காலங்களாகவே தனித்துவத்தை கருத்தில் கொண்டு டாப் அணிகளுக்கு மட்டுமே ஐசிசி அனுமதி கொடுத்து வந்தது. ஆனால் இம்முறை நிறைய கத்துக் குட்டிகள் பெரிய அணிகளை அசால்டாக தோற்கடித்ததால் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தன. அதை ஏற்றுள்ள ஐசிசி அடுத்த உலக கோப்பையில் 20 அணிகள் களமிறங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன் இம்முறை நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுக்கு பதிலாக அந்த 20 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் மோதும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அந்த முதல் சுற்று முடிவில் 4 பிரிவுகளிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் 8 அணிகள் அடுத்ததாக நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். பின்னர் நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் 8 அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று அதில் வெல்லும் அணிகள் ஃபைனலில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் என்ற வகையில் ஃபார்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ICC T20 World Cup

20 அணிகள்:

மேலும் அடுத்த உலக கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க ஆகிய அணிகள் நேரடியாக முதலிரண்டு அணிகளாக தகுதி பெற்றுள்ளன. அதனுடன் இந்த உலகக் கோப்பையில் டாப் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

அதுபோக நவம்பர் 14, 2022ஆம் தேதியன்று ஐசிசி தரவரிசையில் 9, 10 ஆகிய இடங்களை பிடித்த ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் 11, 12வது அணிகளாக தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 8 இடங்களுக்கான அணிகள் வரும் காலங்களில் நடைபெறும் மண்டல தகுதி சுற்று தொடரிலிருந்து தேர்வு செய்யப்படும். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 2 அணிகள், அமெரிக்கா உறுப்பு நாடுகளிலிருந்து 1 அணி, ஆசியாவிலிருந்து 2 அணிகள், கிழக்காசிய பசிபிக் நாடுகளிலிருந்து 1 அணி, ஐரோப்பாவிலிருந்து 2 அணி என்ற அடிப்படையில் அந்த 8 அணிகள் தேர்வு செய்யப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது கிரிக்கெட் வல்லுனர்களை மகிழ்ச்சியை வைத்துள்ளது.

Advertisement