ஐசிசி 2024 மகளிர் டி20 உ.கோ: இன்று துவங்கும் இந்தியாவின் போட்டி அட்டவணை.. எந்த சேனலில் பார்க்கலாம்

- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை அக்டோபர் மூன்றாம் தேதி கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் ஒன்பதாவது முறையாக நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 23 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன. அந்த 10 அணிகளும் தலா 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் லீக் சுற்றின் முடிவில் 2 பிரிவுகளிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். பின்னர் அக்டோபர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறும் செமி ஃபைனலில் வெல்லும் அணிகள் அக்டோபர் 20ஆம் தேதி துபாயில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் இந்தியா விளையாடுகிறது.

- Advertisement -

இந்திய அணி:

அதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் உள்ள குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது. எனவே செமி ஃபைனலுக்கு தகுதி பெற அந்த 4 அணிகளுக்கு எதிராக இந்தியா குறைந்தது 3 வெற்றிகளை பெறுவது அவசியமாகிறது. இதற்கு முன்பாக பயிற்சி போட்டிகளில் விளையாடிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவை முறையே 20, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதைத்தொடர்ந்து இந்தியா தனது முதல் முதன்மை போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது. அந்தப் போட்டி அக்டோபர் 4ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் துவங்க உள்ளது. அதன் பின் அக்டோபர் 6ஆம் தேதி இந்தியா தங்களது இரண்டாவது போட்டியில் துபாயில் பரம எதரி பாகிஸ்தானை சந்திக்கிறது. அப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

எந்த சேனலில் பார்க்கலாம்:

அக்டோபர் 9ஆம் தேதி 3வது போட்டியில் இலங்கையை இரவு 7.30 மணிக்கு துபாயில் சந்திக்கிறது. கடைசியாக வலுவான நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 13ஆம் தேதி 7.30 மணிக்கு சார்ஜாவில் இந்திய அணி எதிர்கொள்கிறது. வரலாற்றில் இந்திய அணி ஒரு முறை கூட மகளிர் உலகக் கோப்பையை வென்றதில்லை. 2020ஆம் ஆண்டு ஃபைனல் வரை சென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

இதையும் படிங்க: டீம்ல, வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டுத்தான் இந்த சம்பவத்தை தான் பண்ணேன் – சர்பராஸ் கான் பேட்டி

இருப்பினும் இம்முறை கடந்த சில வருடங்களாக மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய வீராங்கனைகள் நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். எனவே அந்த அனுபவத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான ஆடவர் அணியை போல இந்திய மகளிரணியும் கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இத்தொடரை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வழியாகவும் மொபைலில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாகவும் பார்க்க முடியும்.

Advertisement