கிரிக்கெட்டுக்கு இத்தனை கோடி ராசிகர்களா..! மிரண்டுபோன ஐசிசி நிர்வாகம்..! ஆய்வில் தகவல்..!

fans

கிரிக்கெட் உலகில் டி20 தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து டெஸ்ட் போட்டிகளை காணும் ரசிகர்களின் ஆர்வம் சற்று மங்கிப்போனது என்று கூறலாம். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எந்தெந்த தரப்பு கிரிக்கெட் போட்டிகள் பெரிதும் விரும்பப்படுகிறது என்று ஐசிசி ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

சமீபத்தில் கிரிக்கெட் விளையாட்டின் தலைமை செயலகமனாக ஐசிசி, கிரிக்கெட்டை உலகும் முழுவதும் உள்ள ரசிகர்கள் எந்த அளவிற்கு விரும்புகின்றனர், எந்த கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் விரும்புகின்றனர் என்று அறிந்துகொள்ள ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலகம் முழுதும் 100 கோடிக்கும் அதிகமானோர் கிரிக்கெட்டை ரசிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

சீனா, அமெரிக்கா மற்றும் 12 உறுப்பு நாடுகளில் 16 முதல் 69 வயது உள்ளர்வகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 100 கோடிக்கும் அதிகமானோர் கிரிக்கெட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் 39 சதவிகித பெண் ரசிகர்களும் கிரிக்கெட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்னர். மேலும், இதில் 90 சதவீகிதம் மற்ற துணை கண்ட நாடுகளிலும், சீனா மாற்றும் அமெரிக்கா நாடுகளிலும் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
india
அதே போல ஐசிசி அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் 75 சதவிகிதம் பேர் டி20 போட்டிகளை தான் விளையாடி வருகின்றனர். அதே போல டெஸ்ட் போட்டிகளையும் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். மேலும், 95 சதவிகித ரசிகர்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டிகளிலும், டி20 உலக கோப்பை போட்டிகளிலும் அதிக ஆர்வம் காட்டுவதாக,சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.