தோனி – ரெய்னா ஓய்வு முடிவை அடுத்து அவர்களை சேர்த்து ஒரு சிறப்பு பதிவை வெளியிட்ட ஐ.சி.சி – விவரம் இதோ

Raina-1

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று இரவு 19:29 மணியளவில் தனது ஓய்வை அறிவித்தார். கடந்த ஓராண்டாக ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக இருந்த அவரது ஓய்வு குறித்து நேற்று மனம் திறந்து தோனி அறிவிக்க ரசிகர்களுக்கு அது பெரும் வேதனையாக அமைந்தது.

Raina

அதனை தொடர்ந்து அடுத்த அடியாக தோனி ஓய்வு பெற்ற சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் தனது ஓய்வு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். தான் பதிவிட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் : உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எப்போதும் உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானது.

முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன். உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவிற்காக விளையாடுவதில் பெருமை. நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டு உள்ளார். “தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி” என்ற கூற்றிற்கு ஏற்ப தோனி ஓய்வு அறிவித்தவுடன் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்.

இவர்கள் இருவரின் ஓய்வு முடிவை அடுத்து இந்த ஜோடி குறித்து சமூகவலைத்தளத்தில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களின் நட்பு குறித்தும் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐ.சி.சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவர்கள் இருவரின் ஜோடியாக ஆடிய புள்ளிவிவரத்தை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதில் உள்ள புள்ளிவிவரப்படி 73 இன்னிங்ஸ்கள் இணைந்து பேட்டிங் செய்த அவர்கள் 3585 ரன்களை குவித்துள்ளனர். சராசரியாக 56.90 வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி 2011 உலககோப்பை வென்ற அணியிலும், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அணியிலும் அவர்கள் இணைந்து விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.