டி20 உலகக்கோப்பை மட்டுமல்ல அடுத்தடுத்து 3 உலகக்கோப்பை – அசரவைக்கும் ஐ.சி.சி அட்டவணை – விவரம் இதோ

Cup

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச போட்டியும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை தொடர்ந்து தற்போது படிப்படியாக அடுத்தடுத்த தொடர்கள் நடத்த கிரிக்கெட் வாரியங்கள் ஆயுத்தமாகி வருகின்றன.

icc

இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி 2020 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் அக்டோபர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்க இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டிற்கு(2021) தள்ளிவைக்கப்பட்ட தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதற்கடுத்து 2022ஆம் ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை அதே ஆண்டு அக்டோபர் மாதம் மாற்றமில்லாமல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொடர் எந்த நாட்டில் நடைபெறும் என்று ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை.

மேலும் 2023 ஆண்டு 50 ஓவர் ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என்றும் அந்த தொடர் நவம்பர் 26ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உலக கோப்பை என்பது ஒரு தொடர் என்பது மார்ச் மாதத்தில் நடத்தப்படும். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐ.சி.சி யின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த 4 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் இன்றி வருந்திய ரசிகர்களுக்கு அடுத்ததடுத்து 3 உலகக்கோப்பை நடைபெற இருப்பது விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.