ஓவர் த்ரோவில் 6 ரன்கள் கொடுத்தது தவறு. வெற்றி நியூசிலாந்துக்கு கிடைக்க வேண்டியது – ஐ.சி.சி யின் 19.8 விதி பற்றிய விவரம் இதோ

Williamson-1
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடர் விசித்திரமான முடிவோடு முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளும் சமமான ரன்களைக் குவித்து போட்டி டை ஆனது. உடனே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் எந்த அணி அதிக பவுண்டரிகள் அடித்ததோ அந்த அணி வெற்றி பெற்றது என்று முடிவெடுக்கப்பட்டு இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

England

- Advertisement -

ஆனால் இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இங்கிலாந்து அணி டை செய்தது செல்லாது என்றும் ஓவர் த்ரோ விடயத்தில் அம்பயர் வழங்கிய அந்த 6 ரன்கள் தவறு என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தற்போது கூறியுள்ளனர். அதன்படி கடைசி ஓவரில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.

ஒரு கட்டத்தில் அந்த அணி கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது அந்த ஓவர் த்ரோ சம்பவம் நடந்தது. ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சித்தபோது நியூசிலாந்து வீரர் த்ரோ செய்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது. எனவே அவர் ஓடிய 2 ரன்கள் மற்றும் ஓவர் த்ரோவில் கிடைத்த 4 ரன்கள் என மொத்தம் 6 ரன்கள் கொடுத்தார் அம்பயர்.

Stokes 2

ஆனால் ஐசிசியின் 19.8 என்ற விதியின் படி பார்த்தால் ஓவர் த்ரோ பந்து பவுண்டரி சென்றால் பெனால்டி ரன்கள் எதுவும் வழங்கப்படாது. மேலும் பவுண்டரிக மற்றும் பேட்ஸ்மேனால் ஓடி முடிக்கப்பட்ட ரன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்ற விதி ஐ.சி.சி விதிமுறை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

அதன்படி பார்த்தால் நேற்று ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 1 ரன்னை முடித்து 2 ஆவது ரன்னுக்காக ஓடிக்கொண்டு இருந்தார். அப்போது பந்து அவரது பெட்டில் பட்டு பவுண்டரி சென்றது. அதனால் அம்பயர்கள் அதனை கருத்தில் கொண்டு 5 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்க வேண்டும் ஆனால் அம்பயர் ஆறு ரன்களை அறிவித்தார்.ஆனால் விதிமுறைப்படி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அம்பயர் கொடுத்து அடுத்த பந்தை வீச சொல்லியிருக்க வேண்டும்.

அப்படி நடந்திருந்தால் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றி இருக்கும். அதோடு சூப்பரோ வரும் நடந்திருக்காது என்று நிபுணர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement